பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரின் புது நெறியை டாக்டர் பேராசிரியர் ரெட்டியார் காட்டுவதற்கு ஒரு சான்று. "பண்டைய சங்கப் பாடல்களிலும் பிற்காலத்தில் எழுந்த பக்திப் பாசுரங்களிலும் பிரிவாற்றாமையைத் தாங்க முடியாது நாயகியே தவிப்பதாக நவிலப் பெற்றிருக்கும் இதுவே அகத்திணை நெறி. ஆனால், இங்கு நாயகன் தவிப்பதாக ஒரு புது நெறியை வகுத்து விடுகின்றார் பாரதியார் (பக்கம் 178), பாரதியின் கீதோபதேசம் என ஆசிரியர் எடுத்துக் காட்டுவது நினைக்கத் தக்கது. “அன்றாடம் வாழ்வே சதம் என்று கருதி மயங்கி நிற்கும் மக்களுக்குப் புதிய வாழ்வில் புகுவதற்கு மக்கள் யாவரும் சுதந்திரப் போரில் பங்கு பெற வேண்டும் என்பதே பாரதியின் கீதோபதேசம்" (பக்கம் 206, எனக் கண்ணன் பாடல்கள்வழி அதனை ஆசிரியர் காட்ட விழைகிறார். பாட்டிலமைந்துள்ள படிமங்களையும் கலவை உருக் காட்சிகளையும் வெளிநாட்டார் இலக்கியத் திறனாய்வுவழி எடுத்துக் காட்டியுள்ளமை, சுவையாகவும், இலக்சிய மாணவர்க்குப் பயனுடையதாகவும் அமைந்துள்ளது. பேராசிரியர் டாக்டர் ரெட்டியாரின் அறிவியல் அறிவும் (பக்கம்,29, 87, 13) தம் ஆசிரிய அநுபவமும் (பக்கம் 75) ஆங்காங்கே ஒளிவிடுகின்றன. மாணவர் சமுதாயததிலும் பொதுக்கூடடங்களிலும் பேசப்படும் அறுவை”யைக் கூட ஆசிரியர் விடவில்லை (பக்கம் 58, 140). நாட்டுத் தலைவர்களையும் தன் ஆய்வுக்குக் கொண்டு வருகிறார் ஆசிரியர், "இப்பகுதியைப் படிக்கும்போது தந்தை பெரியாரே கண்ணனாக நின்று பேசுவதுபோல் தோன்றுகிறது (பக்கம் 66) என்பது அவர் குறிப்பாகும். ஆசிரியர் ஆங்காங்குத் தந்துள்ள அடிக்குறிப்புகள் மிகப் பயனுடையன. இதனால் சில மேதாவிகள் ஆங்கில இலக்கியங்