பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் தாய் 57 கூறுகின்றார். இவற்றின் கோலமும் சுவையும் சொல்லுத் திரமன்று. இன்னும் என்னென தந்துள்ளாள்: தின்பதற்குப் பண்டங்கள், செவி தெவிட்டா நற்பாட்டுகள். நன்முகப் பழகுவதற்கு மெய்த்தோழர்கள் இவற்றையெல்லாம் இந்துள்ளாள். மேலும், கொன்றிடும் எனஇனிதாய்-இன்டக் கொடுநெருப் பாய் அனற் சுவையமுதாய் நன்றியல் காதலுக் கே-இந்த நாரியர் தமையெனைச் சூழவைத் தாள். என்று காமச் சூட்டை எழுப்பும் நங்கையரைத் தந்ததையும் காட்டுகின்றார். அங்காடித் தெருவில் குழந்தைகட்கு பல்வேறு அழகுடை பொம்மைகள் அடுக்கி வைத்திருப் பதைக் காண்கின்றோம். அங்ங்னமே, கண்ணம்மாவாகிய தாய் தனக்கு விளையாடுவதற்கு வைத்திருக்கும் விலங்குக் காட்சிச் சாலைகளையும், நீர்ப்பொருட்காட்சிச் சாலை களையும் காட்டுவார். இறகுடைப் பறவைக ளும்-நிலந் திரிந்திடும் விலங்குகள் ஊர்வனகள் அறைகடல் நிறைந்திட வே-எண்ணில் அமைந்திடற் கரியபல் வகைப்படவே சுறவுகள் மீன்வகை கள்-எனத் தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்; நிறைவுற இன்பம்வைத் தாள் ;-அதை நினைக்கவும் முழுதிலும் கூடுவதில்லை. கவிஞரும் குழந்தை நிலையிலிருந்து கொண்டு அனைத்தையும் கண்டு களிக்கின்றார். சற்றுப் பக்குவம் அடைந்த குழந்தைக்குத் தருவது ப்ோல் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கின்றாள்