பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛& கண்ணன் பாட்டுத்திறன் கண்ணம்மா. சரியான குழந்தைகள் பள்ளியின் ஆசிரியை" யாகத் திகழ்கின்றாள். அவள் தரும் பாடத்திட்டம் இது , சாத்திரம் கோடி வைத்தாள்:-அவை தம்மினும் உயர்ந்ததோர் ஞானம்வைத்தாள் மீத்திடும் போதினி லே-நான் வேடிக்கை புறக்கண்டு நகைப்பதற் கே கோத்தபொய் வேதங்க ளும்-மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துகளும் மூத்தவர் பொய்ந்நடை யும்-இள மூடர்தம் கவலையும் அவள் புனைந் தாள்; வகுப்பில் சில சமயம் வேடிக்கை காட்டுவதுபோல் பொய் வேதங்கள், மதக் கொலைகள் (எ-டு. சமணர்களைக் கழுவேற்றல், சிலுவைப் போர்கள் போன்றவை), அரசர்தம் கூத்துகள் (எ.டு. துரியோதனன் செயல்கள், இராவணன் தீங்குகள், இரணியனின் அடாத செயல்கள் போன்றவை), மூத்தவர்களின் நெறிதவறிய நடக்கை, நெஞ்சிற் கவலை நிதம்பயிராக்கும் மூடத்தனம் இவையும் குழந்தையின் பாடத்திட்டமாகின்றன. ஆ. சி ரி ய ரி வகுப்பில் பாடம் நடத்தும்போது ஒரே அறுவையையும்’ சோர்வடைச் செய்யும் முறையையும் தவிர்க்க வேண்டு மல்லவா? தாய் குழந்தைக்கு வேண்டுவனவற்றையெல்லாம் தருவதைப்போல் கண்ணன் என்ற தாய், வேண்டிய கொடுத்திடு வாள்;-அவை விரும்புமுன் கொடுத்திட விரைந்திடுவாள்; ஆண்டருள் புரிந்திடுவாள்;-அண்ணன் அருச்சுனன் போலெனை ஆக்கிடுவாள்;

* 诛 நீண்டதோர் புகழ்வாழ் வும்-பிற

நிகரறு பெருமையும் அவள்கொடுப்பாள்.