பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் தாய் 莎登 என்று அனைத்தையும் தருவான் என்று சொல்லிக் கவிதையையும் நிறைவு செய்கின்றார்; தலைக்கட்டு கின்றார், இப்பாடல் பூமிதேவியைப் போற்றும் ஒரு பாடலாகக் கருதலாம். அறிஞர்கட்கு இந்தப் பூவுலகம் முழுவதும் ஒரு திருவிழாக் கோலத்துடன் காட்சியளிக்கும் என்று எமர்சன் என்ற அமெரிக்கக் கவிஞர் கூறுவதை நாம் கேட்டதுண்டு. இதையொட்டி பாரதியார் இந்த அகிலத்தையே ஒரு "விசுவரூப தரிசனமாகக் காண்கின்றார்; இயற்கை அன்னைமீது பாரதியார் கொண்ட பேரவாவைப் ப்ாடல் காட்டுகின்றது. இம்முறையில் இவர் ஆங்கிலக் கவிஞராகிய வொர்ட்ஸ் வொர்த்திற்கு ஒப்பாகின்றார். இங்கனம் இயற்கை அன்னையை இயலும் போதெல்லாம் பாராட்டுவது-போற்றுவது-இவர்தம் அழுத்தமான சக்திவழிபாட்டுக் கொள்கையைச் சார்ந்ததாகும் என்று கருதுவது மிகவும் பொருத்தமாகும். மேலும், தத்துவ ஞானக் கவிஞர் தாயுமான அடிகள், பாராதி விண்அனைத்து நீயாச், சிந்தை பரியமட லாஎழுதிப் பார்த்துப் பார்த்து' என்று அகில முழுவதையும் விசுவரூ தரிசனமாகக் கண்டுகளிப்பதைப் போலவே, பாரதியாரும் பிரகிருதி மண்டலத்தையே தம் காட்சிக்குள் அடக்கி மகிழ்கின்றார் என்று கொள்வதிலும் தவறில்லை. நொண்டிச் சிந்து’ மெட்டில் யாக்கப்பெற்ற இக் கவிதையை பாடிப் பாடித் துய்த்தால் கவிதையநுபவத்தின் கொடு முடியை எட்டிப் பிடிக்கலாம். 14. ஆகார புவனம் - 24 ,