பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密器 கண்ணன் பாட்டுத்திறன் கின்றன. இத்தரைகளிலெல்லாம் உயிரினங்கள் வாழ் கின்றன என்பது கவிஞரின் கணிப்பு. இவற்றையெல்லாம் ஆளுவது மனித இனம்-"எங்கள் இனத்தார். ஆதலால் தான் புதன் மண்டலத்திலும் தம் தம்பியர் இருப்பதாகச் செப்புகின்றார் கவிஞர். இந்த மனித இனத்தின் தந்தை தான் கண்ணன். இவன் வரலாறுதான் இங்குக் கூறப் பெறுகின்றது, முதலில் திருதாமத்தைப்பற்றிக் கூறு கின்றார்: நாவு துணிகுவ தில்லை-உண்மை நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே; யாவரும் தெரிந்திட வே-எங்கள் ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவ துண்டு; மூவகைப் பெயர்புனைந் தே-அவன் முகமறி யாதவர்கள் சண்டைகள் செய்வார்; தேவர்கு லத்தவன் என் றே-அவன் செய்திதெரி யாதவர் சிலருரைப் பார். பின்னர் கண்ணனின் பிறப்பைப்பற்றிக் கூறுபவர், பிறந்தது மறக்குலத் தில்;-அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்கு லத்தில்; சிறந்தது பார்ப்பன ருள்ளே;-சில செட்டிமக்க ளோடுமிகப் பழக்க முண்டு; என்கின்றார். பிறப்பினால் rத்திரியன்; வளர்ப்பினால் யாதவகுலத் திலகன், ஆயினும் அவனை அந்தணர்கள் தாம் அதிகமாகப் போற்றுகின்றனர். அவன் அருளிய பகவத்கீதை பார்ப்பனர்களிடம்தான் அதிகச் செல்வாக்கு பெற்றுள்ளது. அதிகம் பேர் அதைப் படிக்காவிடினும் அதைப்பற்றிப் பேசுவதில் குறைவில்லை! செல்வநிலைக்குக் குறைவில்லை; சேமித்துவைத்த பொன்னுக்கும் அளவில்லை. கல்வியில் மிகச் சிறந்தவன்.