பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 கண்ணன் பாட்டுத்திறன் அடுத்து, கண்ணனின் பண்புநலன்கள் பேசப்பெறு கின்றன. நிறந்தனிற் கருமை கொண்டான்;-அவன் நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்: துறந்த நடைக ளுடையான்:-உங்கள் சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான். இன்றைய இக்கருமைநிறக் காளையர் பொன்னிறமேனி மங்கையரை விரும்புவதுபோல், கண்ணனும் அத்தகைய மனப்பான்மையக் கொண்டிருந்தான் போலும்! இக் காலத்தில் உண்மையான பகுத்தறிவு வாதிகள் பொய்யும் புனைகருட்டும் மிக்க போலி சாத்திரங்களைக் கண்டிப்பது போல் கண்ணனும் அத்தகைய சாத்திரங்களை எள்ளி நகைத்துத் தள்ளினான் போலும்! எம்பெருமானை ஏழைபங்காளன்-தீனதயாளன்என்றெல்லாம் கொள்வது மரபு. இம் மரபிற்கேற்பக் கண்ணன் ஏழை மக்களைத் தோழமை கொள்வான்; செல்வம் ஏறியார்தமைக் கண்டு சீறி விழுவான். இடுக்கண் வருங்கால் நகுக' என்ற வள்ளுவப்பெருமானின் அறவுரைப் படி, துன்பத்திலும் இன்பம் காணும் முறையில் நெஞ்சம் தளர்ச்சி கொள்ளாதவர்கட்குச் செல்வச் சிறப்பு ஆன் செய்வான். மனத்தைக் குரங்கு மனம் என்று சொல்வதுண்டு, அதன் கணந்தோறும் மாறிமாறிச் செயற்படுத் தன்மையை நோக்கி. கண்ணனின் புத்தியும் நாழிகைக் கொருமுறை மாறியவண்ணம் இருக்கும்; ஒரு நாள் இருந்த புத்தி மறுநாள் இராது. ஆள் நடமாட்ட மில்லாத பாழிடங்கள், பாழடைந்த மண்டபங்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் மக்களால் கைவிடப் பெற்ற இடிபாடுடைய இடங்கள் இங்கெல்லாம் 5. குறள் 621