பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் தத்தை リ கண்ணனைக் காணலாம். இங்கெல்லாம் பாட்டினிலும் கதையினிலும் நெஞ்சைப் பறி கொடுத்தவனாகக் காணப்பெறுவான். ஊழ்வினையின் ஊற்றத்தை எடுத்துக்காட்ட வந்த வள்ளுவப் பெருந்தகை, நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவது எவன்?" என்று விளக்கிப்போவர். இதனை மனத்திற்கொண்ட பாரதியின் கண்ணனும், இன்பத்தை இனிதென வும்-துன்பம் இனிதில்லை என்றுமவன் எண்ணுவதில்லை. இஃது இருவினை யொப்பு என்ற சைவ சித்தாந்தக் கொள்கையைத் தழுவியுள்ளது. பாரதியாரின் கண்ணன் உயிரிக்குலத்தின்மேல் பேரன்பு மிக்கவன். காக்கை குருவி எங்கள் ஜாதி என்று கூறுபவன். உயிர்க்குலம் அறிவினில் மேன்மையுறுவதற்காக வன்புகள் பல புரிபவன். இவனுக்கு விதி என்ற அமைச்சன் உண்டு, விதிப்படி ஒழுக வேண்டும் என்பதில் கண்டிப்பு உடையவன். வேதங் கள் மக்கள் ஒழுகு முறையைக் கூறுவன என்ற கொள்கை யுடையவன். ஆனால், வேதங்கள் கோத்து வைத்தான்-அந்த வேதங்கள் மனிதர் மொழியி லில்லை. வேதங்கள் என்று புவியோர்-சொல்லும் வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை; வேதங்க ளென்றவற் றுள்ளே-அவன் வேதத்திற் சிலசில கலந்ததுண்டு; வேதங்க ளன்றி யொன்றில்லை-இந்த மேதினி மாந்தர்சொலும் வார்த்தைக ளெல் லசம், 6. குறள் - 379 تا سده rrسه پای