பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t; கண்ணன் பாட்டுத்திறன் என்று உண்மை நிலையை ஒளிக்காமல் எடுத்துரைப்பவன். உலக நன்மைக்காக வருணாசிரம தர்மம் ஏற்படுத்தினர் பண்டையோர். அதன் உண்மைப் பொருளை உணராமல் பின் வந்தோர் அதனைக் கெடுத்து "குட்டிச்சுவராக்கினர்’ இன்று உண்மை வேதம்" இன்னதென்பதை உணராதவரி கள் வேதம், வேதம்’ என்று தவளைகள்பேரல் பொருளற்ற கூச்சல்களை எழுப்புகின்றனர். வருணாசிரம தரிமத்தைப்பற்றிப் பாரதியின் கண்ணன் கூறுவது : நாலு குலங்கள் அமைத்தான்;-அதை நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர், சீலம் அறிவு கருமம்-இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம். மேலவர் கீழவர் என்றே-வெறும், வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்; போலிச் சுவடியை எல்லாம்-இன்று பொசுக்கிவிட்டா லெவர்க்கும் நன்மையுண் டென்பான் . இப் பகுதியைப் படிக்கும்போது தந்தை பெரியரே" கண்ணனாக நின்று பேசுவதுபோல் தோன்றுகின்றது. முருகப் பெருமானை என்றும் இளமையாக இருப்பவன் என்று கொள்வதுண்டு. அங்கனமே பாரதி யாரின் கண்ணனாகிய தந்தையும், வயது முதிர்ந்து விடினும்-எந்தை வாவிபக் களையென்றும் மாறுவதில்லை; துயரில்லை; மூப்பு மில்லை,-என்றும் சோர்வில்லை நோயொன்றும் தொடுவதில்லை; பயமில்லை, பரிவொன்றில்லை-எவர் பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை நயமிகத் தெரிந்தவன் காண்:-தனி நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்,