பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*yi களை மட்டிலும் படித்துவிட்டு-இன்னும் சிலர் எதனையும் படிக்காமல்-இவர்கள் நெருப்பு என்றாலே வாய் வெந்துவிடும் என்று கருதும் அதி மேதாவிகள்-நமது இலக்கியங்களில் சிருங்காரம் ஒன்றே அதிகமாகக் தென்படுவதாயும், அவற்றி லுள்ள பச்சையான வருணனைகளைக் கண்டு அவ்விலக்கியங் களை அதிகமாக இகழ்கின்றனர்” (பக்கம் 137) என எழுதி அங்கு அடிக்குறிப்பில் யார் எனக் குறிக்காமல் திட்டவட்ட மாகக் குறிப்பிட முடியவில்லை என எழுதும் நெறியை ஆய்வு நெறியாளர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். பேராசிரியர் டாக்டர் ரெட்டியாரின் கண்ணன் பாட்டுத் திறனைப் பலரும் படித்து நற்பயன் பெறுவர் என்பதில் ஐயமில்லை. அவருடைய நடை தெளிவாக, நேராகச் செல்கிறது. வடமொழிச் சொற்கள் இருபபினும் அவை தத்துவங்களை விளக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டம் தடைபடவில்லை. பல நூல்களைத் தமிழுலகிற்கு வழங்கிவரும் பேராசிரியர் மேலும் பல நல்ல நூல்களைப் படைத்து தமிழ்த் தொண்டாற்றி மென்மேலும் பேரும் புகழும் பெறத் தமிழன்னை தண்ணருள் சுரப்பாளாக. சென்னை-600 0ே6 冷 球,玲 37-9.83 கா. மீனாட்சிசுந்தரம்