பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் தந்தை #7 துன்பத்தில் நொந்து வருவோரிடம் இரக்கம் காட்டுவான்: அன்பு கனிவான். அன்புகாட்டுமாறு பரிந்துரைப்பான். அன்பினால் துன்பம் அனைத்தையும் துடைத்து விடலாம் என்பான். பொறுத்தவர் பூமி யாள்வார்’ என்ற கொள்கைக்கு ஆதரவு தருபவன். என்புடை பட்ட பொழுதும்-நெஞ்சில் ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான், இன்பத்தை எண்னு பவர்க்கே-என்றும் இன்பமிகத் தருவதில் இன்பமுடையான். இப்பாடலின் மூலம் சில தத்துவக் கருத்துகள் புலனா கின்றன. பாடலின் தொடக்கத்தில் இறைவனைத் தந்தை என்று குறிப்பிடுவதால் உலக மக்கள் யாவரும் சகோதரர் கள் என்ற கருத்தை வற்புறுத்துகின்றா? கவிஞர். துன்பத்தினால் மனிதன் கடச்சுடரும் பொன்போல் ஒளி விடுகின்றான்” என்ற தத்துவம் ஈண்டு காட்டப் பெறு கின்றது. துன்பத்தில் உழலும்போதுதான் ஞானம் உதயமாகின்றது. பாரதப் பெரும்போர் முடிவடைந்த பிறகு கண்ணனும் பாண்டவர்களும் குந்தியைப் பார்க்கக் சென்றபோது அவள் கூறுகின்றாள்: 'கண்ணா, துன்பங் களும் தொல்லைகளும் தொடர்ந்து எனக்கு வருமாறு அருள் செய்க. அப்பொழுதுதான் இதயத்தில் உன்னை நிரந்தரமாக இருத்த முடியும்" என்பதாக. அத்தை மருமகனிடம் பேசும் பேச்சு இது. துன்பங்களினால்தான் மனிதன் தூய்மையடையமுடியும் என்பதனால்தான் இறைவன் ஆடியார்களைத் துன்பத்தில் உழலச்செய்து உய்விக்கின்றான். எம்பெருமானை எந்தத் திருநாமத் தால் குறிப்பது? 7. குறள் - 297