பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ శ్రీ கண்ணன் பாட்டுத்திறன் ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ? என்ற மணிவாசகப் பெருமானின் கருத்தைச் சிந்திக் கின்றோம். கவிஞரே பிறிதோரிடத்தில், யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே; யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங்கொன்றே என்று கூறுவதும் நம் மனத்தில் எழுகின்றது. மெய்ப் பொருளின் இயல்பைப்பற்றித் தாயுமான ஆடிகள் கூதுவது : பந்தமலும் மெய்ஞ்ஞான மான மோனப் பண்பொன்றை அருளிஅந்தப் பண்புக் கேதான் சிந்தை இல்லை; நானென்றும் பான்மை இல்லை; தேகமில்லை காலமிம்லை திக்கு மில்லை; தொந்தம்இல்லை; நீக்கம்இல்லை பிறிதும் இல்லை; சொல்லுமில்லை. இராப்பகலாம் தோற்றம் இல்லை; அந்தமில்லை ஆதி இல்லை; நடுவும் இல்லை, அகமுமில்லை; புறமுமில்லை அனைத்தும் இல்லை.9 இதனையும் சிந்திக்கின்றோம். இங்கனம் பாரதியாரின் இப்பாடல் பல்வேறு தத்துவக் கருத்துகளை நம் உள்ளத்தில் குமிழியிடச் செய்கிறது. . இந்தக் கவிதையின் தலைப்பில் கவிஞர் பிரதா ரஸ்ம்-அற்புதம் என்ற குறிப்பைத் தந்துள்ளார். இதனையும் விளக்குவது இன்றியமையாததாகின்றது. மக்கள் பல பொருள்களைக் கண்ணுறுங்கால் அவற்றோடு தம் மனநிலையைச் சேர்த்துச் சிறப்பாக அநுபவிக்கும் AMMAeeAeAAASAAAA 8. திருவா. திருத்தெள். 1. 9. ஆகார புவனம் - 20.