பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி § கண்ணன்-என் தந்தை பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு பொருளைக் கண்ணால் கண்டவுடன் அதைப்பற்றிய எண்ணங்கள் மனத்தில் உதிக்கின்றன. எதிரில் காணப்பெறும் பொருளின் பண்பு கள், அதன் சிறப்பியல்புகள் இவைபற்றி ஆராய்கின்றன?. பிறகு தம் மன நிலைக்கு ஏற்றவாறு அப்பொருளை உட்கொள்ளுகின்றனர். இது வழக்கமாக நடைபெறுவது. இதற்கு மாறுபாடாக எதையாவது கண்ணுற்றால் உடனே வியப்புணர்ச்சி எழுகின்றது. வியப்பிற்கும் நகைப்பிற்கும் பொருளின் இயற்கைக் குணங்கள் மாறியிருப்பது பொது வான காரணம். ஆனால், நகைப்புக்குரிய பொருள் இயற்கையில் நின்று மாறுபடுவதுடன் பிறரால் வேண்டாத வண்ணமும் அமைந்திருக்கும்; வியப்பு அங்ஙனமன்று. அதன் பரிணாமம் யாவராலும் விரும்பத்தக்க வண்ணம் இருக்கும். சில இடங்களில் விரும்பத்தகாத முறையிலும் மாறுதல் உண்டாகிப் பார்ப்போரை வியக்கச் செய்வதும் உண்டு. இதை மறுப்பதற்கில்லை. ஆயினும், நாம் எதிர் பாராத முறையில் ஒன்று நிகழ்ந்துவிடின் அதனை வியப்பு என்றும், இயற்கைக்கு மாறாகப் பரிணாமம் ஏற்பட்டால் நகைப்பு உண்டாகும் என்றும் இரண்டிற்குமுள்ள வேற்றுமையை அறிதல் வேண்டும். வியப்பும் நகைப்பும் வேறு வேறு உணர்ச்சிகள் என்பதில் ஐயமில்லை. அதற்குக் காரணத்தை மட்டிலும் தனியாய் விளக்க முடியாவிடினும் நம் மணமே இரண்டு விதமாக ஏற்பதை உணர்கின்றோ மன்றோ? அந்தந்த இடங்களில் அவ்வவற்றிற் கேற்ற காரணங்கள் இருப்பதாலேயே சில இடங்களில் விந்தையும் சில இடங்களில் நகைப்பும் ஏற்படுவதாய் ஒப்பவேண்டும் . இரண்டு எடுத்துக்காட்டுகளால் இதனை விளக்கலாம். யசோதைக்குப் பரந்தாமனே குழந்தையாக இருக்கின்றான் என்பது எப்ப்டித் தெரியும்? சாதாரணக் குழந்தையாகவே கண்ணனை எண்ணியிருந்தாள். ஒரு நாள் கண்ணன்