பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 8 கண்ணன் - என் சேவகன் மகா பாரதத்தால் துரதுபோனவன் ஏற்றம் சொல்லுகிறது." என்பது பூர்வசன பூஷணம். இங்குத் தூதுப்ோனவன் கண்ணன்; சர்வேசுவரன், இங்கு "சர்வேசுவரன்’ என்று சொல்லாமல் துர்துபோனவன்” என்று சொன்னதற்குக் காரணம் என்ன? தேவ தேவனான தன்னுடைய பெருமை யும், தான் மேற்கொள்ளும் தொழிலின் தாழ்வையும் பாராமல் கழுத்திலே ஒலை கட்டித் தூது போனதும், தேரோட்டியதும் போன்ற செயல்கள் எல்லாம் எம் பெருமான் அடியார்கட்குப் பரதந்திரனாய் இருக்கும் தன்மையில் உள்ள ருசி"க்கு வசப்பட்டிருந்தமையால் தான் என்று கூறுவர் வைணவ ஆசாரியப் பெருமக்கள். மேலும் அவர்கள், 'துரது போனது கர்மத்திற்குக் கட்டுப்பட்ட காரணத்தால் வந்ததன்று. இச்சை காரண மாகத் தன்னடியார்கள் திறத்தில் செய்யும் தாழ்ச்சி யெல்லாம் ஏற்றத்திற்கு உடலாகும். அந்தப் பரமாதி மாவே இந்த உலகில் பிறந்ததனால்தான் மிக்க ஒளி 1. பூரீவசன புஷணம்-6 (புருடோத்தம நாயுடு பதிப்பு) 2. ருசிபாவச் செயலையோ புண்ணியச் செயலையோ அறிந்தே செய்வதற்குக் காரணமாயுள்ள சுவை,