பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-ஒன் சேவகன் 73 களாகிவிட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு இவர்களின் தொகை பட்டாளம் போல் பெருகி விட்டது. திட்ட oruth (Planning Commission} orgår p flip Gusruh பெருகி வளர்ந்த வரலாற்றை தொடக்கம் முதல் இன்று வரை கருதினால் இவ்வுண்மை தெளிவாகப் புலனாகும். எண்ணிக்கை பெருகப்பெருகத் திறமை தலைகீழ் விகிதத் தில் (inverse proportion) போவதையும்காண்லாம். இன்று முற்பகல் வேலைதொடங்கும் நேரம் முதல் பிற்பகல் வேலை விடும் நேரம்வரையில் அரசு, கல்லூரி, பல்கலைக் கழகம் முதலிய நிறுவனங்களில் நுழைந்து பார்த்தால் கணிசமான அளவில் இருக்கைகள் காலியாகவே இருக்கும். எழுத்து மூலம் விடுப்பு எடுத்தோர் போக விடுப்பில்லாமல் இருக்கையில் காணப்பெறாதவர். தொகை கணிசமாக இருக்கும். அவசர காலநிலை (Emergency) தோன்றும் காலத்தில் மட்டிலும் இப்பணியாளர்களை இருக்கைகளில் காணலாம். செயலாற்றும் திறமையும் மிகுதியாக இருப்பதையும் பார்க்கலாம். பணியாளர்கள் சினம் கொள்ளாமல் தம் நெஞ்சில் கைவைத்து மனச்சான்றைச் சோதித்தால் இவ்வுண்மை தெளிவாகத் தட்டுப்படும். பொதுவாகச் சேவகர்கள்- பணியாளர்கள்-பற்றி பாரதி கூறுகின்றார் : கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெல்லாம் தாம் மறப்பார்; வேலையிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்; இது ப்ொதுவாக அரசு ஊழியர்கள் உட்பட வேலை யாட்களின் இயல்பு என்பதை எல்லோரும் அறிவர். ஊதியம் பெறும் அனைவருமே மனோதத்துவப் போக்கில் ஒரே வகையில் அடங்குவர். கற்றோர்கள்கூட. இதற்கு விதி விலக்கு இல்லை. இவர்கள்கூட சங்கம் அமைத்துக்கொண்டு