பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

帶毒 கண்ணன் பாட்டுத்திறன் கலாட்டா செய்யவில்லையா? கல்லாத பணியாளர் கனைப் பற்றி பாரதியார் கூறுவது: ஏனடா, நீநேற்றைக்கு * இங்குவர வில்லை’ என்றால் பானையிலே தேனிருந்து பல்லால் கடித்ததென்பார்; வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்: பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாள் என்பார்; ஈண்டு வாராமைக்கு மூன்று சாக்குபோக்குகள் கம்பெறுகின்றன. மூன்றாவதாகக் கூறும் காரணத் தைப்பற்றி என் ஆசிரியப் பெருந்தகை லீ பாதிரியார் அவர் கள் திறனாய்ந்து சொன்னது (1934-35) ஈண்டு தினைவிற்கு வருகின்றது. திருச்சி புனித சூசையப்பர் கல்லூசியில் தான் படித்த காலத்தில் மாணாக்கரின் ஒழுங்குகத்திக் கண்டிப்பு இருந்தது : கல்லூரிக்கு வாரா விட்டால் எழுத்து மூலம் விடுப்பு வாங்கவேண்டும்; விடுமுறைக்குப் பிறகு கல்லூரிதிறக்கும்போது எல்லோரும் வருதல்வேண்டும். அப்படி வாரா நிலை ஏற்பட்டால் பெற்றோர் கடிதத்துடன் வருதல் வேண்டும். இம்முறை வில் தவறினால் ரூ. 5.00 தண்டம் (Fine) கட்டுதல் வேண்டும். கல்லூரியில் முதல்வகுப்பில் (First University Class) சேர்த்துப் படிப்போருக்கு முதல் மூன்று மாதம் வரை விதிமுறைகளைச் சற்றுத் தளர்த்துவார்கள். ஆக் காலத்தில் வீ சாமியார் வகுப்பில் நகைச் சுவை கிளப்பு வார். விடுப்புக் கடிதங்களுக்குக் காரணம் எழுதச்சொல்லித் தருவார்; பாட்டியார் இறத்தல், பாட்டியாருக்கு 12-ஆம் நாள் சடங்கு, பாட்டியாருக்கு முதலாண்டு திவசம் என்று எழுதுமாறு கூறுவார். இவையெல்லாம் தீர்ந்த பிறகு