பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் சேவகன் 75 பாட்டியார் மீண்டும் பிறத்தல், முதல் ஆண்டு நிறைவு... இப்படி எழுதுமாறு சொல்வி அவரே சிரிப்பார்! காரணம், பெரும்பாலு:ம் நாட்டுப்புறத்திலிருந்து வரும் மாணாக்கரி கட்கு அவர் பேசும் ஆங்கிலம் புரியாததால், அவர் நகைச் சுவையைக்கேட்டு சிரிக்காமலிருப்பர்; அவர் சிரிப்பதால் இவர்களும்சேர்ந்து சிரிப்பர். வகுப்பு கலைந்த பிறகு புரியா மல் சேர்ந்து சிரித்ததற்கு ஒருவரையொருவர் காரணம் வினவுவர்; இதிலிருந்து அவர்கள் புரியாத நிலையைத் தெரிந்துகொள்ளலாம். இந் நிகழ்ச்சிகளையெல்லாம் நினைந்து பார்க்கும்போது சிரிப்பு வருகின்றது. நொண்டிச் சாக்கு கொண்டு விடுப்பு விண்ணப்பம் எழுதுவோரி இதனைச் சிந்திப்பாராக, சில பணியாளர்கள் பொய்யே அவதாரம் எடுத்தது போல் காணப்பெறுவர். சிலர் சொல் வேறு, செயல் வேறு என்றிருப்பர். சிலர் புறணி பேசுவதையும் உள்வீட்டுச் செய்திகளை ஊரம்பலப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருப்பர். ஓயாமல் பொய்யுரைப்பர்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்; தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்; உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம்பலத் துரைப்பார்; என்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்; சேவகரால் பட்ட சிரமம்மிக உண்டுகண்டீர் இவையெல்லாம் வீட்டுச் சிறு சேவகர்கள், வேலைக்காரி கள் இவர்களிடத்தில் இன்றும் காணலாம். அரக ஊழியர் களும் இதற்கு விதிவிலக்கு இல்லை. மனித இயல்பு