பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் உருவாய் அறிவில் ஒளிர்வாய்-கண்ணா! உயிரின் அமுதாய்ப் பொழிவாய்க் கண்ணா! கருவாய் என்னுள் வளர்வாய்-கண்ணா! கமலத் திருவோ டிணைவாய்-கண்ணா! வருவாய், வருவாய், வருவாய், கண்ணா!' -பாரதியார் பாரதியாரின் கண்ணன் பாட்டு கவிதை இன்பத்தின் -பக்தி அநுபவத்தின் கொடுமுடிக்குப் படிப்போரைப்-பாடி அநுபவிப்போரை-இட்டுச் செல்லும் ஒர் அற்புத இலக்கியப் படைப்பு. இதனைப் படித்து அநுபவித்த பிறகு என் உள்ள்த்தில் குமிழியிட்டெழுந்த சில கருத்துகளே இந் நூலாக வடிவம் பெறுகின்றன. பாரதியாரின் நூற்றாண்டில் இந்நூல் உலாவரத் தொடங்குகின்றது. தமிழன்பர்கள் இதனை ஒரு விருந்தாக ஏற்று அநுபவிப்பார்களானால் அதனை நான் பெற்ற பேறாக மகிழ்வேன். “இதன்(கண்ணன் பாட்டின்) ஆசிரியர் பூரீமான் சி. சுப்பிரமணிய பாரதியாரைத் தமிழ் நாட்டார் அறிவார்கள். ஆனால் அவர் பெருமையை உள்ளபடி அறிந்தவர்கள் மிகமிகச் சிலரே யாவர். பூரீமான் பாரதியார் ஒரு பெரிய மேதாவி; மகா பண்டிதர்; தெய்விகப் புலவர்; ஜீவன் முக்தர். இவர் தமிழ் நாட்டின் ரவீந்திர நாதர்'; இவர் எனது தமிழ்நாட்டின் தவப்பயன்...இந்த ஆசிரி யரின் காலத்திற்குப் பின், எத்தனையோ 1. தோ. பா. வருவாய் கண்ணா!