பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் சேவகன் 77 இரவிற் பகலிலே எந்நேர மானாலும் சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறாமற் காப்பேன்." புதிய வேலைக்காரனை அமர்த்தும்போது, அவன் தன்னைப்பற்றி இவ்வாறெல்லாம் சொல்லிக் கொள்வதை இன்றும் காணலாம். சில தனிப்பட்ட பண்பு நலன்களை யும் எடுத்துரைப்பதையும் காண்கின்றோம். கற்றவித்தை யேதுமில்லை; காட்டு மனிதன், ஐயே! ஆண்பொழுதும் கோலடி குத்துப்போர் மற்போர் நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன். இப்படியெல்லாம் .ே ப. சு. ம் வேலைக்காரர்களைக் காண்கின்றோம். இங்ஙனம் சொல்லுகிறபடி நடப்பவர்கள் சிலரே; சிலர் வேறுவிதமாகச் செயற்படுவதுமுண்டு. இல்லக் கிழத்தி அமைவதும், நல்ல வீட்டு வேலையாள் அமைவதும் ஒருவர்தம் நற்பேறு என்றுதான் சொல்ல வேண்டும். பாரதியார் காட்டும் கண்ணன் என்ற சேவகன்" நல்ல உடற் கட்டுள்ளவன். கண்ணிலே களங்க மற்ற பார்வை, வாயில் இனிமையான பேச்சு. யார் கன்டாலும் "நல்ல வேலைக்காரன்” என்ற கருத்து ஏற்பட்டுவிடும். 4. படிக்காத மேதை-என்ற தமிழ்த் திரைப்படத் தில் கண்ணன்-என் சேவகன் அற்புதமாகக் கையாளப்பெற் றுள்ளது. நடிகர் திலகம்’-நம்மை நன்கு கவர்கின்றார்.