பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் சேவகன் 擎盘 எப்படிப் பேசமுடியும்? எம்பெருமானின் கருணை வெள்ளம் கோத்து வந்தால் அதனை எடுத்துச் சொல்ல மொழிகளிலே உள்ள சொற்களுக்கும் பஞ்சம்தானே! அவதாரங்களில் கிருஷ்ணாவதாரத்தில்தான் கிருஷ்ணன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தான் இறைவன்-எல்லா வல்லமையும் தனக்குண்டு-என்ற எண்ணத்துடன் செயலாற்றுகின்றான். இவன் திருவருள்-தோழமைகிடைத்து விட்டால் சொல்ல வேண்டுமா? ஆகவே, அவன் கவிஞருக்குச் செய்யும் தொண்டுகளை அவரே கூறு கின்றார். கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என்குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்; வீதி பெருக்குகின்றான்; வீடுகத்த மாக்குகின்றன்; தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகின்றான்; மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய் ஒக்கநயங் காட்டுகின்றான்; ஒன்றுங் குறைவின்றிப் பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால் வாங்கி மோர்வாங்கிப் பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து நண்பனாய் மந்திரியாய் நல்லா சிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி என்று சொன்னான்.