பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-ஜான் சேவகன் 岛翼 என்று கூறுவார். 'இடையறாத தொழில் புரிந்து இவ்வுலகப் பெருமைகள் பெற முயல்வேன். இல்லாவிடில் விதிவசமென்று மகிழ்ச்சியோடிருப்பேன்’ என்று வேறோர் இடத்தில் உரைப்பார். இன்னும் அவர், செய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்" என்று தன்னிடம் கவிதை தோன்றுவதைப் பற்றிக் கூறுவார். தன் எழுத்தில் மிகவும் நம்பிக்கை கொண்ட கவிஞர் பெருமான், o எழுதுகோல் தெய்வம்; இந்த எழுத்தும் தெய்வம்." என்று போற்றியுரைப்பார். அதனால்தான் உழைப்பவர் களை-தல்ல உழைப்பாவிகளை- ேச வ க ரி க ைள ப் பாராட்டுகின்றார். நல்ல சேவகர்களைக் கண்ணனாகவே போற்றுகின்றார். அ டி. ய ம ட் டு பேரன்பு கொண்டவன் எம்பெருமான். அவனது செளலப்பிய குணம் அங்ங்ணம் செயற்படுகின்றது. இரண்டு வைணவர்கள் சந்திக்கும் போது ஒருவர் அடியேன் தாசன்' என்று மற்றவர் காலில் விழ, அவர் ‘அடியேன் இராமாநுசதாசன் என்று இவர் காவில் விழுவதைப் பார்க்கின்றோம். தாசத்துவம்' இங்குப் போட்டிபோடுகின்றது! இங்கணமே எம்பெருமான் அடியார்க்கு எளியவனாக-ஏன் அடியவனாக-அமை கின்றான். இதனைக் கவிஞர் நன்கு உணர்கின்றார். ஆதனால், மேலது-26 7. பாரதி அறுபத்தாறு-18 <s. List.-6