பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் சேவகன் 莎器 என்ற வாக்கியத்தை நினைவுகூர்கின்றோம். ஈசுவரன் சீவனாகிய தன்னோடு கலந்து பரிமாறும் போது, அவன், தன்மாட்டுக் கொண்டுள்ள பிரேமப் பித்தினால் தாழ நின்று பரிமாறி, தன்னுடையசேஷத்துவத்தை (அடிமைத் தன்மையை அழிக்குங்கால், நம் சேஷத்துவத்தை நாம் நோக்கிக் கொள்ள வேண்டும் என நினைத்து சீவனாகிய தான் பின்வாங்கி, அவன் போகத்தைக் கெடுக்காமலிருக்க வேண்டும் என்பது இவ்வாக்கியத்தின் பொருளாகும். ஈசுவரன் சேதநனை வினியோகம் கொள்ளல் இரண்டு வகைப்படும். இவற்றுள் அவன் தலைவனாகவே இருந்து இவனை அடிமையாக வைத்துப் பரிமாறுதல் ஒருவகை. சில சமயம் அவன் இவனோடு கலந்து போகந் துய்க்கக் கருதுவான். அவ்வமயம் ஈசுவரன் சேதநனை அடிமை கொள்பவன் போன்று, இவனிடம் நெருங்கி, இவன்மாட்டுத் தனக்குள்ள வேட்கைமிகுதியால் இந்தச் சீவான்மாவைத் தலைவனாக வைத்துத் தான் அடிமையாக இருந்து, இழிதொழில் செய்து அவ்விதத்தில் சேததனை வினியோகம் கொள்ளுதல் மற்றொருவகை. இதற்குக் குசேலர் வரலாற்றைச் சான்றாகக் கொள்ள 畿籍”憩。 பரமபக்தராகிய குசேலர் தன் துணைவியின் துரண்டு தலால் கண்ணனிடம் செல்லுகின்றார். இவன் வருகையைக் காவலரால் அறிந்த துவரைதாதன், தானே அரியணையினின்றும் இறங்கி வந்து, 'திலகமண்தோய கண்ணன் திருவடி தொழுதிட்டானே: என்றவாறு கண்ணனை வணங்குகின்றான். பின்பு தன்னுடன் அவரை அழைத்துச் சென்று, அவருடைய திருவடிகளைத் 9. குசேலோபாக்கியானம்-குசேலர் நகர்ப் புறத்தை அடைந்தது-செப். 404