பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் சேவகன் §§ செய்த உதவி சொல்லுந்தரமன்று. காண்டவகேட்கு அவசிதம் வாழ்நாள் முழுவதும் செய்த உதவி அளவிட்டுக் கூத வொண்ண்ணாது, பலன் கருதாது எம்பெருமானுக்குச் செய்யும் கைங்கரியம் அவனையடையத் துணைசெய்கின் றது. எம்பெருமானுக்கு வயது என்பது இல்லை: என்றும் இளையனாகவே இருப்பான். கிழத்தன்மை-வயது முதிரிவு-அவனை அடைவதில்லை. அவன் பலன் கருதாத அடிமைத்தொழிலையும், நினைவு கொள்ளாமல் அன்பாலும் காதலாலும் செய்யப்பெறும் கடமைகளையும் கணக்கிற்கு எடுத்துக் கொள்வான். பாரதியாருக்குக் கண்ணன் நண்பனாகவும், மெய்விளக்க ஆறிஞனாகவும் வழிகாட்டியாகவும் இருக்கின்றான். தம்முடைய புராணங் களும் இதிகாசங்களும் எம்பெருமானின் செளலப்பியத் தைப்பற்றி (Easy accsesibility) பரக்கப் பேசுகின்றன; அவன் அடியார்க்கு அடியனாக இருப்பதைப் புகழ்ந்து பேசு கின்றன. இந்தக் கவிதையில் பாரதியார் அன்பையும் தொண்டையும்பற்றிப் பேசி நம்முடைய கவனத்தை அவற்றில் ஈர்க்கின்றார் என்று கருதலாம். பரிபாடலில் திருமாலைப்பற்றி வரும் பாடலொன்றில் அவரவர் ஏவ லாளனும் நீயே அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. சி (அரணம் - காப்பு) என்று வருதலையும் சிந்திக்கலாம். அவரவர் நினைத்த வற்றை முடித்துத் தருதலால், இறைவன் அவரவர்க்கு ஏவலாளன் ஆகின்றான். அவரவரி செய்யும் அறம் முதலிய நாற்பொருட்கும் காப்பாகவும் அமைகின்றான் என்ற கருத்தும் இப்பாடலின் கருத்தை ஒரு புடையொத் திருத்தலைக் கண்டு மகிழலாம். 12. பரிபா 4: அடி (72-73)