பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கண்ணாயிரத்தின்

சிங் : நீ யாரு? அவனை எப்படித் தெரியும்? அவனிடம் என்ன பேச்சு?

பெ.: (வெட்கத்துடன்) அவரோட அப்பான்னு சொல்லிவிட்டிங்க...நான் எப்படிங்க விவரமெல்லாம் சொல்றது...நான் அவரிடமே பேசிக்கொள்கிறேன்...

சிங்.: (கண்டிப்புடன்) இப்படிப்பட்ட சினேகமெல்லாம் அவனுக்கு இருக்காதே...இருக்கக் கூடாதே.

பெ: (தலை குனிந்தபடி) இரண்டு மூன்று வருஷமாகவே தெரியும்ங்க...பழக்கம் உண்டுங்க...

சிங்: நீ நாட்டியமாடுவியா?

பெ: (சிறிது குதுகலத்துடன்) ஆமாங்க...பார்த்திருக்கிறீங்களா...

சிங்: இல்லே,இல்லே! இப்பப் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். சரி, அவன் உன்னைப் பார்க்க மாட்டான். விஷயம் என்னான்னு என்னிடம் சொல்லு.

பெ: பார்த்தாகணும்ங்க. நேற்று இராத்திரி அவரு என் பையை எடுத்துக்கிட்டு வந்துவிட்டாரு...பணம் இருக்குது பையிலே, ஐம்பது ரூபா.

சிங்: (கோபமாக) ஏய்! என்ன கதை அளக்கற? உன்னிடமிருந்து ஐம்பது ரூபாயும் பையும் எடுத்துக் கொண்டானா? நீ எந்தக் காவாலிப் பயலிடமோ பணத்தைப் பறி கொடுத்துவிட்டு, பழியைக் கண்ணாயிரத்தின் பேர்லே போட்றே...

பெ: உங்களுக்கு ஒரு விவரமும் தெரியாதுங்க. நீங்க ஒருநிமிஷம் இங்கே வரச்சொல்லுங்களேன்...நான் பேசிக் கொள்கிறேன். பணம் இப்ப அவசரமா வேணும்...

சிங்: (ஆத்திரத்துடன்) தா! செச்சே! போ, வெளியே. பழிபோட்டுப் பணத்தைப் பறிக்கிறவளா நீ! போ வெளியே...