பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/4

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பதிப்புரை


மிழக இலக்கிய வானிலே புதியதொரு தாரகை தோன்றி மின்னியது.

வாழ்வுக்கு உதவாத வரலாறுகளை - மனித வளர்ச்சிக்குப் பயன்பட முடியாத இதிகாச புராண நாடகங்களைப் பார்த்துப் பார்த்து, படித்துப் படித்துப் பழைய உணர்வையும் நல்ல பண்பையும் பிறரால் இழந்து தவித்துக் கொண்டிருந்த தமிழர்களை - இருண்ட பிரதேசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இயற்றமிழ் வல்லுநர்களை விழிப்புக்கும் வெளிச்சத்துக்கும் முதன் முதலாக அழைத்து வந்த பெருமை அந்தத் தாரகைக்கே உண்டு. சுடர்விட்டு மின்னிய அந்தத் தாரகை டாக்டர் அண்ணா அவர்களே ஆவார்கள்.

'பாண்டவர் வனவாசம்', 'இராமர் பட்டாபிஷேகம்' 'சந்திரமதி புலம்பல்', 'அர்ச்சுனன் தபசு', 'பவளக்கொடி', 'ஸ்ரீவள்ளித் திருமணம்' போன்ற மூடநம்பிக்கையை வளர்க்கும் கதைகளுக்கும் நாடகங்களுக்கும் முடிவுகட்ட முத்தான கதைகளையும்