பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்

45

வந்த: இதை இதற்குமுன் எப்போதாவது பார்த்ததுண்டா?

கண்: இல்லை...

வந்த: நாட்டியக்காரி நாடியாவை உமக்குத் தெரியுமா?

கண்: தெரியாது...

வந்த: பார்த்ததுண்டா?

கண் : இல்லை...

வந்த: இதை நாட்டியக்காரி நாடியாவிடமிருந்து நீ பறித்துக் கொண்டதாகக் கருப்பன் கூறுகிறானே, அதற்கு என்ன சொல்கிறாய்?

கண்: பச்சைப் புளுகு!

வந்த: இந்தப் பையையும் கடியாரத்தையும் நீயே கொடுத்ததாகக் கருப்பன் கூறுகிறானே, அதற்கு என்ன சொல்கிறாய்?

கண்: அண்டப்புளுகு!

வந்த: இவ்வளவுதான்! அழுத்தந்திருத்தமாக, தயங்காமல், இப்படிக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும், பயம் துளியும் வேண்டாம். நான் அங்குதானே இருப்பேன். என்ன?

[கண்ணாயிரம் வெறுப்புடன் கூடிய புன்சிரிப்புடன்]

கண்: கருப்பன் கூறும் உண்மை அவ்வளவும் அண்டப் புளுகு என்று நான் சொல்ல வேண்டும்.

வந்த: (சிரித்தபடி) தம்பி வேடிக்கையாகப் பேசுதே...

சிங்: டேய்...வேடிக்கை இருக்கட்டும். அங்கே போயும் ஏதாவது உளறித் தொலைத்துவிடாதே...தெளிவாக...

கண்: அழுத்தந் திருத்தமாகச் சொல்லவேண்டும்.

சிங்: ஆமாம்...ஆமாம்!