பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்

47

அவன்: அது சிலருக்குப் பிடிக்கும் பேச்சு...ஆனா நாட்டியமும் தெரியாது; நல்ல சுபாவமும் கிடையாது. நான் சொன்னேன் பாருங்க, சிட்டு, அது இந்த மாதிரி இடத்துக்குப் பொருத்தம்.

சிங்: கர்மம்! கர்மம்! நாட்டியத்துக்கு அல்ல அய்யா. இது கோர்ட் விவகாரம், அந்தப் பொண்ணு இருக்காளே, நாடியா, அவ சாட்சி சொல்லணும், நம்ம பக்கம்! முடியுமா உன்னாலே, சரிப்படுத்த...

அவன்: (யோசித்தபடி ) கொஞ்சம் கஷ்டம்தானுங்க...பிடிவாதக்காரி!

சிங்: செலவு பற்றிய கவலை வேண்டாம்.

அவன்: பார்ப்போம்ங்க...இங்கே அழைத்துக்கொண்டு வரட்டுமா...அல்லது நீங்களே அங்கே வாரிங்களா?

இங்: இரண்டும் வேண்டாம். நீயே பேசி, அதாவது, நீயே அவளுக்குப் புத்தி சொல்வதுபோலப் பேசி நம்ம பக்கம் சாட்சி சொல்ல சம்மதிக்க வைக்கணும். அதெல்லாம் பெரிய இடம். அந்த இடத்துப் பகையெல்லாம் கூடாது. பல மாதிரி தொல்லையெல்லாம் வரும். அதனாலே அவர்களுக்கு விரோதமாக சாட்சி சொல்லி ஆபத்திலே மாட்டிக் கொள்ளாதே!....அவர்கள் பக்கம் சாட்சி சொன்னா பணமும் கிடைக்கும்; ஆதரவும் தருவாங்க; அப்படி இப்படின்னு சொல்லணும். ஏன்யா, இதையெல்லாமா விளக்க வேணும்? நீ என்ன, அனுபவமில்லாத ஆளா?

அவன்: கோர்ட் விவகாரமான அனுபவம் ஏதுங்க? பார்க்கிறேனுங்க, என்னாலே முடிந்ததை!

[சிங்காரவேலர் பணம் தருகிறார். பெற்றுக் கொண்டு போகிறான்.]


காட்சி—7.

இடம்: நாடியா வீடு
இருப்போர்: நாடியா, மூதாட்டி.