விஞ்ஞான உண்மையை வெளிப்படுத்தும் இஸ்லாமிய நடைமுறை மதறாஸ் டாக்டர் யூ. முஹம்மது காயிதே மில்லத்திற்கு நான் வைத்தியம் விமானத்தில் சென்று விட்டேன். இரவு 11 மணி செய்தேன் என்பது எனக்குப் பெருமைக்குரிய விஷயமாகும். அவர்களிடம் உடல் நலம் குறித்து தான் பேசுவேன் என்பதல்ல. உலகிலுள்ள பல விஷயங்கள் குறித்தும் நாங்கள் பேசுவோம்; கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வோம். ஒருநாள் எங்கள் விவாதம் எங்கோ போய் விட்டது. விஞ்ஞானத்திற்கு இஸ்லாம் இணைப் பானதுதானா? அல்லது முரண்பட்டு நிற்கிறதா என்ற பிரச்சனையில் இறங்கி விட்டோம். "டாக்டர் என்ற முறையில் விஞ்ஞானத்தையும், இஸ்லாத்தையும் ஒப்பிட்டுச் சொல்லுங்கள் என்று காயிதே மில்லத் கூறினார்கள். உதாரணத் திற்கு ஆடு அறுக்கும் முறையைச் சொன்னேன். ஆட்டை இப்படித்தான் அறுத்துச் சாப்பிட வேண்டும் என நமது மார்க்கம் கட்டளையிட் டுள்ளது. இதுவே விஞ்ஞான முறையும் கூட. மருத்துவமும் இந்த முறையைத் தான் யுறுத்துகிறது. வலி நமது முறைப்படி ஆட்டை அறுக்கும்போது அதன் உடம்பிலுள்ள ரத்தம் முழுவதும் வெளிப் பட்டு விடுகிறது. உடம்பிற்குள் தேங்கி விடுவ தில்லை. ஒரே வெட்டாக வெட்டினாலோ அல்லது சித்திரவதை செய்தாலோ, அந்த மிருகத் திற்கு அதிர்ச்சி ஏற்பட்டு ரத்தப் போக்கு தடைப் பட்டு விடலாம். ரத்தம் உடலினுள்ளேயே தேங்கி விடலாம். ரத்தம் மிருகத்தின் உடலி னுள் உறைந்து விட்டால், அது ஒரு சுகாதாரக் கேடு ஆகும். அந்த இறைச்சியை சுத்தமான உணவு என்று ஏற்றுக் கொள்ளமுடியாது. மருத்துவ ரீதியில் இதுவே உண்மையாகும்: நமது மார்க்கமும், நமக்கு விஷயத்தை விளக்கமாகச் சொல்லாமல், இப்படி அறுத்துச் சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டது. விஞ்ஞானத்திற்கு உடன்பாடானதாகவே இஸ்லாம் இருக்கிறது. இப்படி மருத்துவ ரீதியில் பல உதாரணங்களைக் காட்டலாம்.** இவ்வாறு நான் கூறியதைக் கேட்டு காயிதே மில்லத் மகிழ்ச்சியடைந்தார்கள்: இப்படித்தான் நமது மக்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என என்னை ஊக்கப்படுத்தினார்கள். 1971-ம் ஆண்டு நவம்பர் மாதம் டில்லி சென்ற தலைவரவர்கள் ரத்த வாந்தி எடுத் என்று தார்கள் கேள்விப் பட்டதும் அன்று மாலையே மியாக்கானுடன் நானும் டில்லிக்கு '66 அளவில் நாங்கள் ஆஸ்பத்திரி சென்று தலைவ ரைப் பார்த்தோம். உணர்வு இல்லாத நிலையி லேயே அவர்கள் படுத்திருந்தார்கள். டில்லி டாக்டர் கரோலிடம் பேசி நிலவரத்தை நான் உணர்ந்து கொண்டேன். எட்டு பாட்டில் ரத்தம் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது. முன் துரிதமாக அவர்களது உடல்நிலை னேறியது. நிலைமை சீரானதும் டில்லியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்த்தோம். நோய் குணமாகி வீடு திரும்பினார்கள். ஆனால் ஓரிரு மாதங்களிலேயே அவர்களுக்கு மஞ்சள் காமாலை வந்து விட்டது. நிலைமை அபி . விருத்தி அடையாததால் மீண்டும் ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்த்தோம். ஜெனரல் ஆஸ் பத்திரி டாக்டர்களும் ஸ்டான்லி ஆஸ்பத்திரி டாக் டர்களும் ஒன்றாகக் கூடி கலந்தாலோசித்து தலைவ ரவர்களுக்கு வைத்தியம் செய்தோம். தங்களுக்கு இயலாத நிலை இருந்தபோதிலும், வேளா வேளைக்கு அவர்கள் தொழுது கொள் வார்கள். வெள்ளிக் கிழமையன்று ஜும் மாத் தொழ பள்ளிவாசலுக்குப் போக வேண்டுமென்பார்கள். நான் அதற்கு அனுமதிக்கவில்லை. மெதுவாக புன்முறுவல் சய்தபடி 'அப்படியா. சரி இங்கேயே லுஹர் தொழுது கொள்கிறேன்" என்று கேட்டுக் கொள்வார்கள். கடைசி ஒரு சில நாட்கள் நானும் எனது மனைவியும் (அவளும் M.D. படிப்பு படித்த டாக்டர் தான்) ஆஸ்பத்திரியிலேயே புரபஸர் அறையி லேயே தங்கி விட்டோம். இரவு இரண்டு மணி வரை அவர்கள் அருகில் இருப்பேன். புரபஸர் அறையில் சில மணி நேரம் ஓய்வு எடுத்து விட்டு காலை 'சுபுஹ்' தொழுதவுடன் தலைவர் அருகில் வந்து அமர்ந்து கொள்வேன். காயிதே மில்லத்திற்காக மக்கள் செய்த துஆ கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களுக்காகச் செய்யப் பட்ட து ஆவில் அவர்களுக்கு வைத்தியம் பார்த்த எங்களுக்கும் ஓரளவு கிடைத்திருக்கும் என்ற நம்பிக்கையும், ஆறுதலும் எனக்கும், எனது மனைவிக்கும், உண்டு. அந்தப் பெருமையே எங்களுக்குப் போதுமானது.
பக்கம்:கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர்.pdf/75
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை