பக்கம்:கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லட்சியங்களுக்காக இந்த இயக்கம் இருக்க வேண்டுமென்கின்ற அந்த எண்ணத்தோடு குறிப்பிட்டார். அவர் மேலும் பேசும் பொழுது கலைஞர் அவர்களுடைய ஜாதகமே என்று கோடிட்டுக் காட்டி - ஒரு முறை வெற்றி பெறுவது. அடுத்த முறை தோல்வியடைவது என்று சொன்னார். ஆனால் சரித்திரக் கணக்கு சரியானதல்ல. தொடர்ந்து வெற்றியும் பெற்றிருக்கிறோம். தொடர்ந்து தோல்வியும் பெற்றிருக்கிறோம். எனவே என்னைப் பொறுத்தவரையில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தது கூட அல்ல. தொடர்ந்து வெற்றியும் பெற்றிரு க்கின்றோம். தொடர்ந்து தோல்வியும் பெற்றிருக் கின்றோம். ஆனால் இந்த இரண்டு நிலையிலும் தொடர்ந்து கொள்கைவாதிகளாக இருக்கிறோம். இதை மறந்துவிடக்கூடாது. 1967-ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் மாபெரும் வெற்றி பெற்று இந்த மாநிலத்தை ஆளுகின்ற பொறுப்பை அண்ணா ஏற்றார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 71-ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜரும், மூதறிஞர் ராஜாஜியும் ஒன்று சேர்ந்து தி.மு.கழகத்தை வீழ்த்த அன்றைக்குப் படை திரட்டி நின்றபோது தி.மு.கழகம் சிவற்றி பெறாது என்று அகில இந்தியாவிலுள்ள அரசியல் ஆருடக்காரர்கள் அத்தனை பேரும் திட்டவட்டமாகத் தெளிவாகக் கூறிய அந்தக் கால கட்டத்திலும் கூட தி.மு.கழகம் 185 இடங்களில் வெற்றி பெற்றது. நான் சொல்ல விரும்புகிறேன். அன்றும் சரி. இன்றும் சரி. இதுவரையிலே 185 இடங்களை ஆளுங்கட்சி ஒன்று பெற்றதென்றால் தமிழகத்தில் தி.மு.கழகத்தைத் தவிர வேறு எந்தக் கட்சியும் பெற்றதில்லை. 11 11