பக்கம்:கண் திறக்குமா.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

111



மறுநாள் வேறொருத்தி வருகிறாள் - இப்படியே எங்கெங்கேயோ கெட்டு எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரையும் சிவகுமாரனுக்குக் கல்யாணம் செய்து வைத்து விட வேண்டியதுதானா? - பேஷ், உன்னுடைய யோசனையே யோசனை, அப்பா! - வழியே போகிற சனியன்களை யெல்லாம் விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டுமென்று சொல்கிறாயே?’’

‘வழியே போகிற சனியனை விலைக்கு வாங்கச் சொல்லவில்லை; வீட்டோடு இருந்த சனியனைத்தான் விலைக்கு வாங்கச் சொல்கிறேன் - நீங்கள் நினைப்பது போல் வேடிக்கை வேடிக்கையாகவும் இல்லையே, வினை யாகவே முடிந்துவிட்டதே! - உங்கள் சிவகுமாரனுக்குச் செல்வக் குமாரன் ஒருவன் பிறந்திருக்கிறான். துரதிர்ஷ்ட வசமாக அவன் செத்துப் போகவுமில்லை; உயிரோடு இருக்கிறான்.!”

‘நான் சிவகுமாரனுக்குத்தான் பிறந்தேன் என்று அவன் உன்னிடம் வந்து சொன்னானாக்கும்?’

‘இதற்கெல்லாம் நீங்கள் சாட்சியைத் தேடிக் கொண்டிருக்க முடியுமா, என்ன?”

‘அப்படியானால் நீ அவளை அருந்ததி என்று ஒப்புக் கொள்வதுபோல் நானும் ஒப்புக்கொள்ள வேண்டுமா? - அவ்வளவு தூரம் என் புத்தி இன்னும் கெட்டுப் போகவில்லை!’

‘நீங்கள் இப்படி வாதிப்பது அநியாயமானது, அக்கிரமமானது! சிவகுமாரன் அவளைக் காதலிக்கும் போது, மடு சாட்சி, மலைசாட்சி, இந்திரன்சாட்சி, சந்திரன் சாட்சி என்றெல்லாம் சொல்லியிருப்பான் - அவையெல் லாம் சாட்சி சொல்ல வந்துவிடுமா? - மலையும் மடுவும், சந்திரனும் இந்திரனும் ஒருக்காலும் சாட்சி சொல்ல வரமாட்டார்கள் என்ற தைரியத்தைக் கொண்டுதானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/114&oldid=1379040" இலிருந்து மீள்விக்கப்பட்டது