பக்கம்:கண் திறக்குமா.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

117

 ‘ஏன், எமலோகத்துக்குப் போகிறது!’ என்றாள் அவள்.

‘போகிறேன் அம்மா, போகிறேன்; கட்டாயம் போகிறேன். இனிமேல் நான் இருந்துதான் என்ன பிரயோசனம்? இந்தக் குழந்தையை மட்டும் தயவு செய்து எடுத்துக்கொள்ளுங்கள்; உங்களால் முடியாவிட்டால் இதை வேறு யாரிடமாவது கொடுத்து வளர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள். எத்தனையோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையே என்னை வளர்த்ததற்காக இன்னுங் கொஞ்ச நேரம் மட்டும் எனக்காகப் பொறுத்துக்கொள்ளுங்கள் - இருள் கவியட்டும்; பகவான் மீது பாரத்தைப் போட்டு விட்டு நான் ஒடும் ரயிலிலிருந்து கீழே குதித்துவிடுகிறேன். எதிர்பாராத விதமாக நேர்ந்த மரணம் என்று உலகம் சொல்லட்டும்; உங்களுடைய கவலையும் ஒருவாறு தீரட்டும்?’ என்று சொல்லிக்கொண்டே, செங்கமலம் குழந்தையைத் தாயாரிடம் நீட்டினாள்.

‘விழுகிறவள் குழந்தையோடுதான் விழுந்து தொலையேன்!” என்றாள் அவள்.

‘சும்மா இருங்கள், அம்மா! மனித இதயம் கண்ணாடியைப் போன்றது; உடைந்தால் ஒட்டவைக்க முடியாது!’ என்று நான் அவள் வாயை அடக்க முயன்றேன்.

‘நீங்கள் ஒண்ணு, நான் சும்மா இருந்தாலும் பார்ப்பவர்கள் சும்மா இருப்பார்களா?’

‘அதற்குத்தான் தாலியைக் கட்டித் தொலைத்து விட்டீர்களே?’’

‘என்னத்தைச் செய்வது, போங்கள்! - தாலி கட்டி விட்டால் மட்டும் போதுமா? அதைப் பார்த்த பிறகாவது அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சும்மாவா இருந்து விடப் போகிறார்கள்? - அவர்களுக்கு இந்தமாதிரி விஷயங்களில் என்னதான் அக்கறை இருக்குமோ, தெரியவில்லை -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/120&oldid=1379029" இலிருந்து மீள்விக்கப்பட்டது