பக்கம்:கண் திறக்குமா.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

119

 “ஆமாம், இவர்களுடைய அன்பில் விளைந்த அமுதம் - இல்லை; சனியன் இருக்கிறதே, அதைக் கொண்டு போய் அந்த நாசகாரன் வீட்டில் போட்டுவிட்டு வந்து விடுவதென்று நான் இருந்தேன். அதனால் என் உயிரே போவதாயிருந்தாலும் அதற்கு நான் துணிந்திருந்தேன். இதை அவன் தலையில் கட்டிவிட்டால் இவளைப் பிடித்த பீடை விட்ட மாதிரி. அப்புறம் உலகத்தார் முன்னிலையில் இவளும் அசல் கன்னிப் பெண்ணாகக் காட்சியளிக்கலாம்; கல்யாணமும் செய்து கொள்ளலாமல்லவா?”

‘அதற்கு நான்தான் தடையாயிருந்தேனாக்கும்?’ ‘ஒரேயடியாய் அப்படிச் சொல்லி விடுவதற்கும் இல்லை. முதலில் இந்தப் பத்தினித் தங்கம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையே? - காதல் மலரைப் போன்றதாம்; அது ஒரே ஒரு முறைதான் மலருமாம் - இப்படியெல்லாம் என்னவெல்லாமோ சொல்லிக் கதைக்கிறாளே!”

‘'பலே, உங்கள் வாழ்க்கை இலக்கிய ரசனை மிக்கதா யிருக்கிறதே! செங்கமலம் என்ன படித்திருக்கிறாள்?’’ என்றேன் நான் என்னை மறந்து.

‘பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்புவரைதான் படித்தாள்; வீட்டில் கண்டதைப் படித்துப் பண்டிதையாகி விட்டாள்!’

‘மேற்கொண்டு இன்னுங் கொஞ்சம் படித்திருந்தால் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியை அவள் பெற்றிருப்பாள் - ம், என்ன செய்வது?’’

‘அப்படித்தான் நானும் நினைத்திருந்தேன்; அதற்குள் அவள் காலை வாரி விட்டுவிட்டுப் போய் விட்டார்!’

‘அவர் போகும்போது உங்களுக்கென்று ஒன்றும் வைத்துவிட்டுப் போகவில்லையா!’

‘எல்லாம் வைத்திருந்தார்; எனக்குத்தான் ஒன்றும் கிடைக்கவில்லை!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/122&oldid=1379043" இலிருந்து மீள்விக்கப்பட்டது