பக்கம்:கண் திறக்குமா.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

கண் திறக்குமா?


‘ஏன்?’’

“அது பெரிய கதை’

“அதைத்தான் கொஞ்சம் சொல்லுங்களேன்?”

‘பாழும் சட்டம் இருக்கிறதே, அது சிவகுமாரனைப் போல எங்களை மோசம் செய்துவிட்டது - ம், சட்டம் என்ன செய்யும்? - ஜாதி வெவ்வேறாக இருந்து விட்டதே அதற்குக் காரணம்!’

‘ஏன் நீங்கள் கலப்பு மணம் செய்து கொண்டீர்களா என்ன?’’

‘அந்தக் கூத்தை ஏன் கேட்கிறீர்கள்? - இவள் இப்போது கதைக்கிறாளே, என்னமோ காதல் கீதல் என்று - அந்த எழவெடுத்த காதலுக்கு நானும் எனது இளம் பிராயத்தில் பலியானேன். இவளுடைய அப்பா அப்போது என் அக்காளின் குழந்தைகளுக்கு' ட்யூஷன்” சொல்லிக் கொடுப்பதற்காக எங்கள் வீட்டிற்கு வருவார். அப்படி வரும்போதெல்லாம் அவர் என்னை ஒரு தினுசாகப் பார்ப்பார்; நானும் அவரை ஒரு தினுசாகப் பார்ப்பேன். இதிலிருந்து அந்தப் பாழாய்ப்போன காதல் உதயமாயிற்று - இதில் வேடிக்கை என்ன தெரியுமா? - அவருக்கு ஏற்கெனவே கல்யாணமாகியிருந்தது. ஆனால் அது காதல் கல்யாணமில்லையாம் - அவரேதான் சொன்னார், இந்த விஷயத்தை எனக்கு! - அப்புறம் எப்படியோ அவருக்கே தெரியாமல் அவருடைய உள்ளத்தை நான் திருடிக்கொண்டு விட்டேனாம்; அதைக் காணாமல் அவர் ‘தேடு, தேடு’ என்று தேடும்போது, அது என் உள்ளத்தில் ஒளிந்து கொண்டிருந்ததாம். ஆகவே, நீ என்னைக் கல்யாணம் செய்து கொண்டால்தான் ஆச்சு; இல்லையென்றால் பிராணனை விட்டுவிடுவேன்!” என்று அவர் என்னைப் பயமுறுத்தினார் - ஏனோ தெரியவில்லை, எனக்கும் அந்த மனிதரைக் கல்யாணம் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/123&oldid=1379047" இலிருந்து மீள்விக்கப்பட்டது