பக்கம்:கண் திறக்குமா.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

125

அவன் என் கையைப் பிடித்து நிறுத்தி, ‘ஆமாம் உனக்கு எப்படி இவர்களைத் தெரிந்தது?’ என்று கேட்டான்.

‘அதுதான் கதை, அந்தக் கதையைத்தான் இப்போது சொல்ல நேரமில்லை என்கிறேன்?’’

‘என்னைக் கண்டதும் செங்கமலம் ஏன் பஞ்சாய்ப் பறந்துவிட்டாள்? - எனக்குச் சொல்லாமலே கல்யாணம் செய்துகொண்டு, எனக்குத் தெரியாமலே ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்டதற்காகவா?’ என்றான் அவன் சிரித்துக் கொண்டே.

‘வெட்கக்கேடுதான்! - எல்லாவற்றையும் உனக்குப் பின்னால் சொல்கிறேன்; போய் வா!’ என்று நான் நடையைக் கட்டினேன்.

செங்கமலத்தின் தாயார் என்னைத் தொடர்ந்தாள். இரண்டடிகள் எடுத்து வைத்த நான் என்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தேன்; பாலு நின்றது நின்றபடி நின்றுகொண்டிருந்தான்.

‘ஊரிலிருந்து திரும்பி வர எத்தனை நாட்களாகும்?’ என்றேன் நான்.

‘இரண்டு நாட்களுக்குள் திரும்பிவிடுவேன்!’ என்றான் அவன்.

‘அதெப்படி முடியும்? அங்கே அம்மாவின் உடம்பு மோசமாயிருந்தால்?”

‘இங்கே அழைத்துக்கொண்டு வந்துவிடுவேன்!’ ‘'சரி, வந்ததும் என்னைப் பாரிஸ்டர் பரந்தாமன் வீட்டில் வந்து பார்!’

‘சித்தியும் செங்கமலமும்கூட உன்னுடன் தானே இருப்பார்கள்?”

“ஆமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/128&oldid=1379077" இலிருந்து மீள்விக்கப்பட்டது