பக்கம்:கண் திறக்குமா.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

கண் திறக்குமா?


‘'என்ன உதவி, சித்ரா - சொல்; உனக்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயார்!’

‘உங்களைவிடச் சாந்தினிக்கு அந்த உதவியைச் செய்வது சுலபம். அம்மாவுக்குப் பிறகு அம்மாவாக இருந்து எனக்காக இதுவரை எவ்வளவோ செய்திருக்கும் அவள், அதை மட்டும் ஏனோ செய்யமாட்டேன் என்கிறாள் - நீங்களாவது அவளிடம் சொல்லவேண்டும். ஏனெனில், உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் அவள் இப்போது செய்வாள் போலிருக்கிறது. அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது. உங்களிடம் அவளுக்கு! - ஆனால் எனக்கு மட்டும் உங்களிடம் நம்பிக்கையில்லை அண்ணா, நம்பிக்கை இல்லவேயில்லை. அதனால்தான் அந்த உதவியை எனக்கு அவசியம் செய்யவேண்டுமென்று கேட்கிறேன்!”

‘ம், புண்பட்ட உள்ளம் புலம்பத்தான் செய்யும் - அதனாலென்ன, என்னிடம் உனக்கு ஏன் நம்பிக்கையில்லை? வாழ்க்கை எப்போதுமே சுகம் நிறைந்ததாயிருக்குமா? கஷ்டமும் கலந்ததாய்த்தானே இருக்கும்? - அதற்காக இப்படிச் சோர்வடைந்துவிடலாமா? - உனக்கு என்ன உதவி வேண்டுமோ, அதைச் சொல் - உடனே செய்கிறேன்!’

‘ரொம்ப சந்தோஷம், அண்ணா! இன்னொரு தடவை நீங்கள் சிறைக்குப் போக நேர்ந்தால் எங்கிருந்தாவது எனக்கு ஒரு துளி நல்ல விஷமாகப் பார்த்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும் - என்ன, செய்வீர்களா?'’

நான் திடுக்கிட்டு, ‘'சித்ரா, என்ன இது! இவ்வளவு கோழையாக நீ இருப்பாய் என்று நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லையே?’ என்றேன்.

இந்தச் சமயத்தில், வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாகப் பார்த்தேன்; பாரிஸ்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/131&oldid=1379098" இலிருந்து மீள்விக்கப்பட்டது