பக்கம்:கண் திறக்குமா.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

கண் திறக்குமா?

 சர்க்கார் மேற்கொள்ள வேண்டுமென்று சொல்ல உன் நாவு கூசவில்லையா?”

‘கூசும், கூசும்; இன்னுங் கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள் - கூசுவதும் கூசாததும் தெரியும்!”

‘'எத்தனை நாட்கள் பொறுத்திருந்தால் தான் என்ன? சத்தியத்தின் பிறப்பிடமாகவா சர்க்கார் மாறிவிடப் போகிறது?”

“ஏன் மாறாது, நிச்சயம் மாறும்!”

'‘அப்படியே மாறட்டும். அதனாலென்ன, உரிய பதவிகளில் உட்கார்ந்து, அடிக்கும் கொள்ளையைச் சம்பளக் கொள்ளையாக அடித்துவிட்டுப் போகிறோம்!’

‘'நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்களுக்குத் தேச விடுதலை, சமூக விடுதலையெல்லாம். ஏதோ ‘பிஸினஸ்’ மாதிரியல்லவா இருக்கிறது?’’

‘'சந்தேகமென்ன, ‘பிஸினஸ் தான்! இதை நான் ஒப்புக்கொள்கிறேன்; மற்றவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள். இதுதான் அவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். இல்லையென்றால் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு வக்கீல் தொழிலை உதறித்தள்ளி விட்ட நான் எப்படிப் பிழைப்பதாம்?’'

‘'இப்படிப் பிழைப்பதற்கு நீங்கள் வக்கீல் தொழிலை விட்டிருக்க வேண்டாமே!'’

‘'அது தெரியாதா, எனக்கு? நீ பேசாமலிருந்து நான் சொல்வதைக் கேள்: ஏதோ உனக்கும் என்னுடைய அனுபவம் பயன்படட்டுமே என்றுதான் இவ்வளவு தூரம் சொல்கிறேன். வேண்டுமானால் நீயும் சாயந்திரம் என்னுடன் குருகுலத்துக்கு வந்துப் பாரேன்; ஆறு மணி வரை அவர் அதைச் சுற்றிப் பார்வையிடுவார்; அதற்குப் பின் தம் பேரால் ஹாலோ, அறையோ கட்டுவதற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/135&oldid=1379126" இலிருந்து மீள்விக்கப்பட்டது