பக்கம்:கண் திறக்குமா.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

கண் திறக்குமா?

'‘முதலில் நீ எப்படி உருப்படப் போகிறாய், அதைச் சொல்?”

‘'நானா, இந்த வீட்டை விற்றுவிட்டு உருப்படப் போகிறேன்!”

“என்ன!’

“ஆமாம், இந்த வீட்டை விற்றுவிட்டுத்தான் உருப்படப் போகிறேன்!’'

‘'சரி, இதை விற்ற காசு உன்னை எத்தனை நாட்கள் தாங்கும்?”

‘'அதற்குப் பின் நான் சும்மாவா இருக்கப் போகிறேன்? அந்தக் காசைக் கொண்டு பத்திரிகை நடத்தப் போகிறேன்!”

“அப்பொழுதும் பணக்காரனின் தயவு வேண்டுமே?”

“அது வேறு பத்திரிகை என்னுடைய பத்திரிகையோ பாட்டாளிகளின் சுகத்திலும் துக்கத்திலும் பங்கெடுத்துக் கொள்ளும்.’'

‘'நாசமாய்ப் போச்சு! பாட்டாளிகளுக்காவது, சுகமாவது? அவர்களுக்கும் துக்கந்தான்; உனக்கும் துக்கந்தான்! வீணாகக் கெட்டலையாதே, பெற்றோர் ஞாபகார்த்தமாக இருக்கும் இந்த ஒரு வீட்டையும் விற்று விட்டு நிற்கக் கூட நிழலின்றித் தவிக்காதே! இப்போதைக்குச் சித்ராவிடம் முந்நூறு ரூபாய் கொடுக்குமாறு நான் சாந்தினியிடம் சொல்லியிருக்கிறேன்; அதை வைத்துக் கொண்டு குறைந்த பட்சம் ஒரு மாத காலமாவது நீங்கள் கஷ்டமில்லாமல் காலந் தள்ளிவிடலாம். அதற்குள் நீ வேண்டுமானால் உன்னுடைய விருப்பம்போல் பத்திரிகைத் தொழிலில் இறங்கு. ஆனால் அதற்காக வீட்டை விற்காதே; அந்தத் தொழிலுக்கு வேண்டிய பணத்தை நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/137&oldid=1379141" இலிருந்து மீள்விக்கப்பட்டது