பக்கம்:கண் திறக்குமா.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

கண் திறக்குமா?


பெயரை வெளியிட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏன் தெரியுமா? தன்னடக்கத்தால் அல்ல; வேறு யாராவது நிதிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தினால் தான்! அதிலும் இந்த இன்-கம்-டாக்ஸ் தொல்லை என்று ஒன்று இருக்கிறதே, அந்தத் தொல்லையை நிதியினால் ஓரளவு குறைத்துக் கொள்ளலாம். அதற்காகவே நல்ல வழியில் சம்பாதிப்பவர்கள் ஐந்தும் பத்துமாகக் கொடுத்தால், கெட்ட வழியில் சம்பாதிப்பவர்கள் ஐயாயிரம், பத்தாயிரமென்று கொடுக்கிறார்கள். அப்படியிருக்கும் போது நாம் ஏன் அக்கிரமத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? நல்ல வழியில் சம்பாதித்துக் கொடுத்தவர்களின் பணத்தை வேண்டுமானால் ஸி.ஆர். தாஸ் நிதிக்கே அனுப்பி விடுவோம்; கெட்ட வழியில் சம்பாதித்துக் கொடுத்தவர்களின் பணத்தை...’'

என்னால் தாங்க முடியவில்லை; எழுந்து கைகூப்பிய வண்ணம், “வணக்கம்; என்னை இத்துடன் விட்டு விடுங்கள்!’ என்று எழுந்தேன்.

‘ம், நீ எப்படித்தான் பிழைக்கப் போகிறாயோ!’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே சென்றார் அவர்.

***

அன்று மாலை; நான் விட்டாலும் பாரிஸ்டர் பரந்தாமன் என்னை விடுவதாயில்லை. ஆகவே வேறு வழியின்றி அவருடன் திலகர் குருகுலத்துக்குச் சென்றேன். அதைப் பார்வையிட வந்திருந்த பெரிய மனிதருக்குப் பரந்தாமனார் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்ட பிறகு, எல்லோருமாகச் சேர்ந்து குருகுலத்தைச் சுற்றி வந்தோம். பாரிஸ்டர் பரந்தாமன் அதுவரை தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/139&oldid=1379380" இலிருந்து மீள்விக்கப்பட்டது