பக்கம்:கண் திறக்குமா.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

கண் திறக்குமா?


சேர்ந்து படிக்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவர் வற்புறுத்தினார். நடுநடுவே தம்மைப்பற்றியும் தர்ம காரியங்களில் தமக்குள்ள சிரத்தையைப் பற்றியும், சற்றே குறிப்பிட அவர் மறந்துவிடவில்லை!

அடுத்தாற்போல் என்னையும் ஏதாவது பேசுமாறு கேட்டுக்கொண்டார் பரந்தாமனார்.

‘'சர்வகலாசாலை அளிக்கும் யோக்கியதாம்சங்களுக்குத் தக்கபடிச் சர்க்கார் உத்தியோகம் கிடைக்கும் வரை இம்மாதிரிக் குருகுலங்களால் மாணவர்களுக்கு அவ்வளவாக நன்மையில்லை என்பது என் அபிப்பிராயம்; அதைப்பற்றி வேண்டுமானால் பேசட்டுமா?’’ என்றேன் நான்.

‘'கடைசியில் கூட்டத்தைக் கசப்புடன் முடிக்க நான் விரும்பவில்லை; வந்தனோபசாரம் கூறி இனிப்புடன் முடித்து விடுகிறேன்!'’ என்றார் அவர். ‘ அப்படியே செய்யுங்கள்!’' என்று சொல்லிவிட்டு நான் பேசாமல் இருந்துவிட்டேன்.

பாரிஸ்டர் பரந்தாமனார் எழுந்து பதிலுக்குப் பதில் கணக்கைத் தீர்த்துக் கொள்வது போலப் பெரிய மனிதரின் உதார குணத்தைப் பற்றி வானளாவப் புகழ்ந்தார். கடைசியில், வந்திருந்தவர்களுக்கெல்லாம் தம் வந்தனத்தைத் தெரிவித்துக்கொண்டு கூட்டத்தைக் கசப்பின்றி முடித்தார்.

அவ்வளவுதான்; கையில் தயாராக வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் செக்கைப் பரந்தாமனாரிடம் நீட்டினார் பெரிய மனிதர். அகமும் முகமும் ஒருங்கே மலர அதைப் பெற்றுக்கொண்டு, ‘'தங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை என்னைப் போன்றவர்கள் இன்னும் எத்தனை தர்ம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/141&oldid=1379171" இலிருந்து மீள்விக்கப்பட்டது