பக்கம்:கண் திறக்குமா.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

139

 காரியங்களில் வேண்டுமானாலும் துணிந்து இறங்கலாம்!’ என்றார் பாரிஸ்டர்.

அவர் சொன்னதும் ஒருவிதத்தில் உண்மைதானே?

***

கூட்டம் கலைந்த பிறகு மூவரும் பேசிக்கொண்டே குருகுலத்தின் வாயிலை அடைந்தோம். எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அதை நிவர்த்தி செய்துகொள்வதற்காக, ‘'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?’' என்று பெரிய மனிதரைக் கேட்டேன்.

‘'மூன்று குழந்தைகள். அவர்களில் இருவர் ஆண் குழந்தைகள், ஒன்று பெண் குழந்தை’' என்றார் அவர்.

‘'சரி; அவர்கள் எங்கே படிக்கிறார்கள்?’'

'‘ஒருவன் பிரஸிடென்ஸி காலேஜில் படிக்கிறான்; இன்னொருவன் லயோலா காலேஜில் படிக்கிறான்; பெண் குழந்தை க்வீன்மேரீஸ் காலேஜில் படிக்கிறது - ஏன், எதற்காகக் கேட்கிறீர்கள்?’'

‘'இல்லை, பாரிஸ்டர் பரந்தாமனுக்குத்தான் சாந்தினியைத் தவிர வேறு குழந்தைகள் எதுவுமில்லை. அதனால் தம் குழந்தைகளை முதலில் குருகுல வாசம் செய்ய விட்டுப் பிறருக்கு வழி காட்ட அவரால் முடியாமலிருக்கிறது. நீங்களாவது உங்கள் குழந்தைகளை இந்தக் குருகுலத்தில் விட்டுப் பிறருக்கு வழி காட்டியிருக்கலாமே?’ என்றேன் நான்.

அவ்வளவுதான் - அவருடைய மீசை துடித்தது; கண்கள் ஜிவ்வென்று சிவந்தன. கையிலிருந்த ஊன்று கோலை அப்படியும் இப்படியுமாக ஆட்டிய வண்ணம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/142&oldid=1379381" இலிருந்து மீள்விக்கப்பட்டது