பக்கம்:கண் திறக்குமா.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

147

இவ்வாறு எண்ணியதும் என்னை நானே எண்ணி நகையாடிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்டதும், "இதோ வந்து விட்டார், இவர்தான் என் அண்ணா!" என்றாள் சித்ரா, தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவரிடம்.

"வணக்கம்" என்றார் அந்தப் புதிய மனிதர், என்னை நோக்கி.

பதிலுக்கு "வணக்கம்" என்று சொல்லக்கூட எனக்கு ஏனோ வாய் வரவில்லை; பேசாமல் எதிரே உட்கார்ந்து அவரைக் கூர்ந்து நோக்கினேன்.

சித்ரா ஒரு கணம் என்னை உற்றுப் பார்த்தாள்; மறுகணம் 'கலீர்' என்று சிரித்தாள்.

எனக்குச் 'சுறுக்'கென்றது; சித்ராவின் பக்கம் பார்வையைத் திருப்பினேன்.

"அவரை ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள், அண்ணா ! நீங்கள் நினைப்பதுபோல நாங்கள் நடப்பதாயிருந்தால் அதற்கு இதுவா இடம்? ஒன்று ஆஸ்பத்திரியாக இருக்க வேண்டும்; அல்லது கடற்கரையாக இருக்கவேண்டும்!" என்றாள் அவள்!

இது எனக்கு என்னவோ போலிருந்தது. முகத்தில் அசடு வழிய, "அது சரி; இவர் யார் என்று நீ எனக்குச் சொல்லவேயில்லையே?" என்றேன் நான்.

"இவரா, இவர்தான் என்னைத் திருச்சியிலிருந்து சென்னைக்குக் கொண்டு வந்து சேர்த்த புண்ணியவான்!" என்றாள் அவள்.

"அப்படியா!" என்றேன் நான்.

"ஆமாம், அண்ணா ; அன்றிரவு அந்தக் கிராதகன் வீட்டை விட்டுக் கிளம்பும்போது இருந்த தைரியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/150&oldid=1378897" இலிருந்து மீள்விக்கப்பட்டது