பக்கம்:கண் திறக்குமா.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154


"இருக்கும், இருக்கும். ஏன் இருக்காது? எல்லாம் கற்பனைதானே, நிச்சயம் இருக்கும்!" என்று குறுக்கிட்டாள் சித்ரா.

"அப்படியானால் ஆக்ராவில் காட்சியளிக்கும் 'தாஜ்மஹால்' வெறுங் கற்பனைதானா?" என்றாள் சாந்தினி.

"உண்மையாகத்தான் இருக்கட்டுமே, அந்தத் தாஜ்மஹாலைத் தன் உள்ளத்தில் அவன் கட்டியிருப்பான் என்பது என்ன நிச்சயம்?" என்றாள் சித்ரா.

"அது முடிகிற காரியமா? அவ்வளவு பெரிய தாஜ்மஹாலை அவன் உள்ளத்தில் கட்ட முடியுமா?" என்றேன் நான்.

"சரி; அது போகட்டும். லைலா - மஜ்னு, ரோமியோ - ஜூலியட் போன்ற காதலரின் கதைகளிலிருந்து நமக்கு என்னத் தெரிகிறது?" என்று இன்னொரு கேள்வியைப் போட்டாள் சாந்தினி.

'"காதல், வாழ்க்கையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுமென்று தெரிகிறது!" என்றாள் சித்ரா.

இதெல்லாம் சாதாரண மனிதர்களை பொறுத்த விஷயம். வள்ளி - தேவானை சமேதராக விளங்கும் முருகப் பெருமான், ராதா - ருக்மணி சமேதராக விளங்கும் கிருஷ்ண பரமாத்மா ஆகியவர்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று நான் குறுக்கிட்டுக் கேட்டேன்.

"என்னத்தைச் சொல்வது? அதே காரியத்தை மனிதன் செய்தால் தவறு; கடவுள் செய்தால் திருவிளையாடல்!" என்றது வேறுக் குரல் ஒன்று. திரும்பிப் பார்த்தேன்; பாலு வந்து கொண்டிருந்தான்.

"வா பாலு, வா!" என்று நான் அவனை வரவேற்றேன்; சித்ராவும், சாந்தினியும் உள்ளே சென்று விட்டனர்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/157&oldid=1379594" இலிருந்து மீள்விக்கப்பட்டது