பக்கம்:கண் திறக்குமா.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

கண் திறக்குமா?

"ஆமாம்; 'தமிழ்ப் பெருமக்களின் தனிப்பெருங் குணங்களில் அதுவும் ஒன்றல்லவா?"

"அது ஒன்றுதானா! இன்னும் எத்தனையோ இருக்கிறதே!"

"அதைப் பற்றி இப்பொழுது ஒன்றும் வேண்டாம்; உம்முடைய பத்திரிகைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர் என்பதை முதலில் சொல்லும்?"

"தீனபந்து!"

"பெயர் நன்றாய்த்தான் இருக்கிறது; ஆனால்....?"

"ஆனால் என்ன, ஆனால்?"

"பெயரளவில் வேண்டுமானால் பத்திரிகை 'தீன பந்துவாக இருக்கலாம்; கொள்கையில் மட்டும்..."

"பணக்காரரின் பந்துவாக இருக்க வேண்டுமோ?"

"அதைச் சொல்லித்தானா தெரிந்துகொள்ள வேண்டும்! சொல்லாமலே தெரிந்து கொண்டிருக்கலாமே!"

"பணக்காரருடைய தயவைக் கொண்டு பிழைக்க விரும்பவில்லை நான்; ஏழைகளுடைய தயவு இருந்தால் போதும் எனக்கு!"

"இப்படிச் சொன்னவன் யாரும் இதுவரை உருப்பட்டதில்லை. அப்படி யாராவது உருப்பட்டிருந்தால் அவன் உண்மையில் 'ஏழை பங்காள'னாயிருந்திருக்க முடியாது; தலைசிறந்த 'ராஜதந்திரி'யாயிருந்திருக்க வேண்டும். அந்த ராஜதந்திரத்தோடு வேண்டுமானால் நீரும் நடந்து கொள்ளலாம். உதாரணமாக ஏழைகளுக்குப் பணக்காரர் ஏதாவது தீங்கு செய்தால் அதை எடுத்துச் சொல்லக் கூடாது. அப்படியே எடுத்துச் சொன்னாலும் அதற்குக் காரணம் பணக்காரர் என்று சொல்லிவிடக் கூடாது. நாடோ நகரமோ, அல்லது மழையோ வெய்யிலோ, அதுவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/167&oldid=1379232" இலிருந்து மீள்விக்கப்பட்டது