பக்கம்:கண் திறக்குமா.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

167

போடலாம். அவற்றைத் தவிர வேறு ஏதாவது வேடிக்கையாக எழுதும்; தமிழ் நாட்டு வாசகர்கள் இன்னும் 'குழந்தைப் பிராயத்திலிருப்பதால் வேடிக்கை காட்டினால்தான் படிப்பார்கள். முடியுமானால் பகுத்தறிவுப் போட்டி நடத்தும்; தரித்திரம் பிடுங்கித் தின்பதால் பேராசை வளர்ந்து வரும் தமிழ் நாட்டில் அதற்குப் பேராதரவு இருக்கும்; அடிக்கும் கொள்ளையைச் சட்ட ரீதியாகவும் அடிக்கலாம்; அதை மறைக்கப் பண்பாட்டைப் பற்றியும் பேசலாம். அதற்குப்பின் அரசியல் இருக்கவே இருக்கிறது; அதையும் ஒரு கை பாரும்; எடுத்ததற்கெல்லாம் ஆமாம் போட்டு எழுதும்; நடுநடுவே உம்முடைய சொந்தப் பெருமையைப் பற்றியும் கொஞ்சம் சங்கோசத்துடன் சொல்லிக் கொள்ளும். அப்படிச் சொல்லிக் கொள்ளும்போது தயவு செய்து என்னை மட்டும் மறந்து விடாதீர்!"

"எதைச் சொன்னாலும் நீங்கள் இப்படிக் குதர்க்கவாதம் செய்தால் நான் என்னதான் செய்வது? எனக்கோ தேசத்துக்கு எந்த விதத்திலாவது சேவை செய்ய வேண்டுமென்று இருக்கிறது; அத்துடன் வயிற்றுக் கவலையையும் ஓரளவு தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று இருக்கிறது. இரண்டுக்கும் சேர்ந்தாற்போல் ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென்றால் அதற்குப் பத்திரிகைத் தொழிலை விட்டால் வேறு ஒன்றுமில்லையே?"

"ஏன் இல்லை? இந்தக் காலத்தில்தான் எல்லாமே தேசத் தொண்டாகப் பரிணமித்திருக்கிறதே! ஆலை முதலாளிகள் தாங்கள் செய்வது தேசத் தொண்டு என்கின்றனர்; துடைப்பம் தூக்குவோர்கள் தாங்கள் செய்வது சமூகத் தொண்டு என்கின்றனர். அவர்களைப் பின்பற்றி லேவாதேவிக்காரன், ஹோட்டல்காரன், பல சரக்குக் கடைக்காரன் எல்லோருமே தாங்கள் செய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/170&oldid=1378821" இலிருந்து மீள்விக்கப்பட்டது