பக்கம்:கண் திறக்குமா.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

கண் திறக்குமா?

தன்னலமற்ற சேவையைப் பற்றித் தாங்களே வானளாவப் புகழ்ந்து விளம்பரம் செய்து கொள்கின்றனர். சமீபத்தில் ஒரு விளம்பரம் வந்திருந்ததே, அதை நீர் பார்க்கவில்லையா? - முகுந்தலால் ராம்சேட் பீடிக்காரன் தன்னுடைய அறுபது வருட காலச் சேவையைப் பற்றி அதில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தானே! அப்படியெல்லாம் இருக்கும்போது நீர் பத்திரிகைத் தொழிலை விட்டால் தொண்டு செய்ய வேறு தொழில் கிடையாது என்கிறீரே? பேசாமல் நீரும் வேண்டுமானால் ஒரு பீடிக் கம்பெனியை ஆரம்பித்துத் தேசத்திற்குத் தொண்டு செய்யுமே, ஐயா!"

இதற்கு நான் என்ன சொல்வது? சிரித்துவிட்டுப் பேசாமல் இருந்தேன்.

"சரி, உம்முடைய பத்திரிகை என்ன, வார வெளியீடா?"

"ஆமாம்."

"என்ன விலை?"

"இரண்டணா!"

"செலவைப் பற்றித் திட்டம் போட்டிருக்கிறீரா? ஓர் இதழுக்கு என்ன செலவாகும்?"

"குறைந்தபட்சம் ரூபாய் இரு நூறாவது செலவாகும் என்று நினைக்கிறேன். அது சரி, நீங்கள் ஏன் அதைப்பற்றிக் கேட்கிறீர்கள்?"

"ஒரு சின்ன கணக்குப் போட்டுப் பார்க்கத்தான்; உம்முடைய லட்சியத்தின்படிப் பத்திரிகை நடத்தினால் பத்தாயிரம் ரூபாயில் எத்தனை இதழ்கள் வெளியிட முடியும் என்று தெரிந்துகொள்ளத்தான்! - இப்பொழுது ஐம்பது இதழ்கள் வெளியிடலாம் என்று தெரிகிறது; எனவே ஒரு வருடத்துக்கு நான் தைரியமாகச் சந்தா கட்டலாம் - இல்லையா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/171&oldid=1379239" இலிருந்து மீள்விக்கப்பட்டது