பக்கம்:கண் திறக்குமா.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

கண் திறக்குமா?


‘'நீ மட்டுமா, செல்வத்தையும் அழைத்துக் கொண்டா?’' என்றார் அவர்.

‘'போங்கள், அப்பா! நான் அழுவேன்!’' என்றாள் அவள்.

‘'இப்படித்தான் சித்ராவும் சொன்னாள்; இப்போது அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள்’' என்றார் அவர்.

அவ்வளவுதான்; ‘'அவளை நீங்கள் பார்த்தீர்களா, அப்பா?’' எப்போது பார்த்தீர்கள்? எப்படி இருக்கிறாள்?” என்று ஆவலுடன் கேட்க ஆரம்பித்துவிட்டாள் சாந்தினி.

‘'வேதாரண்யத்துக்குச் செல்லும் வழியில் பார்த்தேன். அவள் எவ்வளவு தூரம் விஷயம் தெரிந்தவள் என்பதை என்னால் அப்பொழுதுதான் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் இருவரும் தங்கள் கிராமத்தில் அக்கம் பக்கம் தெரியாமல் தொண்டு செய்து வருகிறார்கள். ஹரி ஜனங்களுக்கு அவர்கள் கோயிலைத் திறந்துவிடவில்லை; அதற்குப் பதிலாகத் தங்கள் வீட்டைத் திறந்து விட்டு அதில் ஒரு பக்கத்தில் அவர்களைக் குடியிருக்கச் செய்திருக்கிறார்கள். தங்களுக்குச் சொந்தமாயிருந்த நிலத்தில் பெரும் பகுதியைத் தங்களிடம் வேலை செய்து வந்த விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கிறார்கள். தங்களால் இயன்றவரை அங்குள்ளவர்கள் எழுத்தறிவு பெறவும் வழிகாட்டியிருக்கிறார்கள்!’'

‘'சரிதான், காந்தி மகானின் நிர்மாணத் திட்டமே அதுதானே?’ என்றேன் நான்.

‘'அதுதான் இல்லை; அவள் அதைக் கட்டை வண்டித் திட்டம் என்கிறாள். அது மட்டுமல்ல; மனிதன் ஆகாய விமானத்தில் பறக்கும் இந்த நாளில் அது வெறுங் கேலிக்கூத்து என்பதும் அவள் அபிப்பிராயமாகும்.’'

“என்ன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/191&oldid=1379198" இலிருந்து மீள்விக்கப்பட்டது