பக்கம்:கண் திறக்குமா.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

கண் திறக்குமா?


“போகட்டும்; வீட்டுக்கு ஒருவன் அவனைப் பின் பற்றிச் சாகட்டும்!”

“செத்தவர்கள் செத்தார்கள்; இவன் ஏன் சாக வேண்டுமாம்!”

“இருப்பவர்கள் மானத்தோடு வாழ்வதற்காக, ஈனர்களுக்கு முன்னால் அந்த மானத்துக்கு மரியாதை செலுத்துவதற்காக!”

அவ்வளவுதான்; “செலுத்திவிட்டேன், செல்வம் மானத்துக்கு நான் மரியாதை செலுத்திவிட்டேன்!” என்று கத்திக்கொண்டே, கையில் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் உள்ளே நுழைந்தான் பாலு.

அந்தக் கோலத்தில் அவனைக் கண்டதும் ஆ! என்று அலறிவிட்டாள் செங்கமலத்தின் தாயார். அவளுடைய வாயை நான் சட்டென்று பொத்திவிட்டுத் திரும்பினேன். அதற்குள், ‘இனி நான் சட்டத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும்; இனி நான் சட்டத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும்’ என்று மறுபடியும் கத்திக் கொண்டே அவன் வெளியே போய்விட்டான்.

20. என் குருநாதர்!

காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட எத்தனையோ துன்பங்களில் பாலுவைப் பிரிந்த துன்பமும் ஒன்றாயிற்று. இந்த நிலையில் என்னைப் போன்றவர்களின் சோர்வைப் போக்கும் திருப்பணியில் அடால்ப் ஹிட்லர் இறங்கினார். அதன் பயனாக இரண்டாவது உலக மகாயுத்தம் மூண்டது. பிரிட்டிஷ் சர்க்கார் வழக்கம் போல் இந்தியா நம்முடைய தேசம் என்பதை ஒப்புக்கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/203&oldid=1379610" இலிருந்து மீள்விக்கப்பட்டது