பக்கம்:கண் திறக்குமா.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

203

எனக்கே இன்னொருவருடைய தயவு வேண்டியிருந்ததே!"

"என்ன!"

"மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்து விடாதீர்! எனக்கு மட்டும் மாஜிஸ்ட்ரேட்டின் தயவு இல்லாமலிருந்தால் என்னையும் உம்மைப்போல்தான் போகிற போக்கில் சர்க்கார் விட்டிருப்பார்கள்!"

"நிஜமாகவா சொல்கிறீர்கள்?"

"ஆமாம் ஐயா, ஆமாம்!"

"என்னால் நம்பவே முடியவில்லையே?"

"நீர் எதைத்தான் நம்புகிறீர்? கண்ணுக்கு முன்னால் நடப்பதை நம்பும் வழக்கங்கூட உம்மைப் போன்றவர்களிடந்தான் கிடையவே கிடையாதே; பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, பார்க்கவேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து....."

அவர் முடிக்கவில்லை; அதற்குள் ஸ்நான அறையை நோக்கி விறுவிறுவென்று நடந்தேன். பாரிஸ்டர் பரந்தாமன் திடுக்கிட்டு, "இந்நேரத்தில் ஸ்நானம் எதற்கு?" என்று கேட்டார்.

"காங்கிரஸுக்கு!" என்றேன் நான்.

"ஏன்?"

"என்னைப் போன்றவர்களுக்கு இனிமேல் அதில் இடமில்லாததால்!"

அவ்வளவுதான்; பாரிஸ்டர் பரந்தாமன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார். அவருடைய சிரிப்பைப் பொருட்படுத்தாமல் நான் ஸ்நானம் செய்துவிட்டு வந்து, "குருநாதா, எல்லா வகையிலும் தங்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/206&oldid=1378697" இலிருந்து மீள்விக்கப்பட்டது