பக்கம்:கண் திறக்குமா.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

கண் திறக்குமா?

"குருநாதனின் சித்தம் எதுவானாலும் சீடனின் சித்தமும் அதுவே!" என்றேன் நான்.

"பேஷ்! அப்படிச் சொல்லும்; அப்படிச் சொல்லும்!" என்று அவர் என்னைத் தட்டிக் கொடுத்தார்.

"அப்புறம் கேட்க வேண்டுமா? சர்க்கார் புத்தம் புது நோட்டுகளை எங்களுக்கென்றே அச்சிட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். மனங் கொண்ட மட்டும் நாங்கள் வாரிக் குவித்தோம். மறு வருடமே எனக்கும் சாந்தினிக்கும் கல்யாணமாயிற்று. சித்ராவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பாரிஸ்டர் பரந்தாமனை அவள் வாயார வாழ்த்தினாள்; அவரால்தான் அண்ணன் வாழக் கற்றுக் கொண்டதாக அவள் நம்பினாள் - உண்மையும் அதுதானே?"




"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/211&oldid=1378685" இலிருந்து மீள்விக்கப்பட்டது