பக்கம்:கண் திறக்குமா.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கண் திறக்குமா?


‘'அம்மாவைப்போலவே எல்லாரும் அவரவர்கள் குடும்ப கெளரவத்தையே பெரிதாகக் கருதுவது என்று ஆரம்பித்துவிட்டால் தேசத்தின் கதி என்ன? நாற்பது கோடி மக்கள் எப்போதும் வறுமையிலேயே வாடிக் கொண் டிருக்க வேண்டியதுதானா?”

‘'சுத்தப் பொய்! நாற்பது கோடி மக்களும் எங்கே வறுமையால் வாடிக் கொண்டிருக்கிறார்கள்? வடநாட்டி லுள்ள ஜி.டி. பிர்லா கோஷ்டியும், தென்னாட்டிலுள்ள வடபாதி மங்கலம் கோஷ்டியும் கூடவா வறுமையால் வாடிக்கொண்டிருக்கின்றன? உயர்தர உத்தியோக வர்க்கமும் நடுத்தர உத்தியோக வர்க்கமும் கூடவா பசியால் துடித்துக் கொண்டிருக்கின்றன?”

‘'அவர்கள் சிறுபான்மையோர்தானே? பெரும்பான்மையோரைப் பற்றித்தானே இப்பொழுது பேச்சு?’’

‘'அந்தப் பெரும்பான்மையோருக்காக நீங்கள் என்ன செய்துவிட முடியும்?”

‘'அவர்களைப் பீடித்த வறுமை ஒழிய வேண்டுமானால் தேசத்தைப் பீடித்த அன்னிய ஆதிக்கம் முதலில் ஒழிய வேண்டாமா? அதற்காகத்தான் நாங்கள் பாடுபடுகிறோம்.’

‘'இப்படித்தான் எத்தனையோ பேர் சொல்கிறார்கள், ஆனால் எனக்கென்னவோ இதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தை என்று படுகிறது!”

‘இதென்ன, சித்ரா? நாலுந் தெரிந்த நீயே இப்படிப் பேச ஆரம்பித்து விட்டாயே!”

‘'பின் என்ன, அண்ணா? தேசத்தைப் பீடித்த அன்னிய ஆதிக்கம் ஒழிந்தால் மக்களைப் பீடித்த வறுமை எப்படி ஒழியும்?”

‘'அவர்களுடைய நலத்தை தங்கள் நலமாகக் கருதும் தேசத்தலைவர்களின் கைக்கு அரசாங்க அதிகாரம் மாறும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/33&oldid=1379234" இலிருந்து மீள்விக்கப்பட்டது