பக்கம்:கண் திறக்குமா.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

31

அவர்கள் மக்களைப் பீடித்த வறுமையை ஒழித்து விடுவார்கள்!”

“இந்த இடத்தில்தான் எனக்குச் சந்தேகம். இப்பொழு திருக்கும் தேசத் தலைவர்களெல்லாம் உண்மையிலேயே மக்களின் நலத்தைத் தங்கள் நலமாகக் கொண்டவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“இல்லாமல் என்ன?”

“எனக்கு நம்பிக்கையில்லை; மக்களின் ஆதரவைப் பெற்றுத்தான் அவர்கள் தலைவர்கள் ஆனார்கள் என்று கூட என்னால் நம்ப முடியவில்லை. வெறும் பிரசார பலன் அவர்களை ஏன் தலைவர்களாக்கியிருக்கக் கூடாது?”

“இதென்ன கூத்து...!”

“நீங்கள் வேண்டுமானால் மக்களைக் கவனித்துப் பாருங்கள் - ‘வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போனாலன்றி நாம் சுக வாழ்வைக் காணமுடியாது. ஆகவே, அவனை முதலில் விரட்டுங்கள்!’ என்று சொல்பவருக்கும் அவர்கள் ‘ஜே’ போடுகிறார்கள்; ‘வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னால் இந்த நாடு எப்படியிருந்தது? எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழித்தல், தீ வைத்தல் - மீண்டும் அதே கதிக்கு நாம் ஆளாக வேண்டுமா? ஆகவே காங்கிரஸ் காரனை முதலில் விரட்டுங்கள்!” என்று சொல்பவருக்கும் அவர்கள் ‘ஜே’ போடுகிறார்கள். இந்த லட்சணத்தில் வெறும் பிரசார பலத்தைக் கொண்டு ஒரு சிலர் அவர்களை மாற்றிவிடுவது சுலபமாக இருக்கிறது. இதன் பலன் கடைசியில் என்ன ஆகும். தெரியுமா? வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போனாலும் அரசாங்க அதிகாரம் உண்மையான மக்கள் தலைவர்களின் கைக்கு வராது. பணத்தாலும் பக்க பலத்தாலும் தலைவர்களானவர்களின் கைக்கே போய்ச் சேரும். எனவே, தேசத்தைப் பீடித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/34&oldid=1379162" இலிருந்து மீள்விக்கப்பட்டது